தினமும் 10,000 ஸ்டெப்ஸ்... ஈஸியா நடக்க ஸ்மார்ட் டிப்ஸ்!

தினசரி வாழ்வில் சில சிறிய மாற்றங்களைச் செய்து, எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் சிரமமின்றி நாளுக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடக்கலாம். இதற்கான ஐந்து எளிய டிப்ஸ்கள் இதோ!

தினசரி வாழ்வில் சில சிறிய மாற்றங்களைச் செய்து, எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் சிரமமின்றி நாளுக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடக்கலாம். இதற்கான ஐந்து எளிய டிப்ஸ்கள் இதோ!

author-image
WebDesk
New Update
istockphoto-1324038732-612x612 (1)

நிபுணர்கள் கூறுவதன்படி, ஒரு நாளில் சராசரியாக 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமான வழிகாட்டியாகக் கருதப்படுகிறது. இத்தகைய நடைபயிற்சி, முதன்மையாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் இதயம் சம்பந்தமான சிக்கல்களின் அபாயம் குறைவடைகிறது.

Advertisment

மேலும், இதனுடன் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் இது பெரிதும் உதவுகிறது. இது அதிக கலோரி செலவழிப்பை ஏற்படுத்தி உடலில் தேங்கும் கொழுப்பை குறைக்கும். அதனுடன் நீரிழிவு (டயபட்டீஸ்) மற்றும் உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) போன்ற நீண்டகால நோய்களைக் கட்டுப்படுத்தும் திறனும் நடைபயிற்சிக்கு உண்டு. இதனை தினசரி பழக்கமாக மாற்றி, உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை எளிதாகப் பேண முடியும் என நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்த எளிய விஷயமானது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு, நம்முடைய ஆயுள் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சக்திவாய்ந்த அணுகுமுறையாக இருக்கிறது. எனினும் பலர் என்னது தினசரி 10,000 அடிகள் நடப்பதா என்று மலைக்கிறார்கள். தங்களது பிசி ஷெட்யூலுக்கு நடுவே எப்படி தினசரி பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடப்பது என்று குழம்புகிறார்கள்.

நீங்களும் இத்தகையவர்கள்தானா? உங்கள் நாள் முழுவதும் சில எளிமையான மற்றும் நிலையான மாற்றங்களைச் செய்யும் முறையில், இந்த உடல் இயக்கத்தைக் கடினமில்லாமல் சாதிக்கலாம். தினமும் 10,000 அடிகள் நடக்கும் இலக்கை எளிதாக அடைய ஐந்து சுலபமான வழிகளை இங்கே அறிந்துகொள்ளலாம்.

Advertisment
Advertisements

காலை நடைப்பயிற்சி: காலை நேரத்தில் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி செய்யும் பழக்கத்தை உருவாக்குவது, 10,000 ஸ்டெப்ஸ் இலக்கை எளிதில் அடைய உதவும். இது நாளை ஆரோக்கியமாகத் தொடங்கச் செய்கிறது மற்றும் உங்களுக்கு உற்சாகத்தையும் தரும்.

படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள்: படிக்கட்டுகளை பயன்படுத்துவது, உங்கள் நடை இலக்கை அடைய உதவுவதுடன், கால்களை வலுப்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். லிஃப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டுகள் ஏறி இறங்கும் பழக்கம் பல நன்மைகளை தரும்.

வீட்டு வேலைகள்: வீட்டு வேலைகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்வது தினசரி ஸ்டெப் கவுன்ட்டை அதிகரிக்க மற்றும் உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தை மேம்படுத்த உதவும் ஒரு பயனுள்ள வழியாகும். உதாரணமாக வீட்டை சுத்தம் செய்வது, மாப் போடுவது மற்றும் தூசிக்களாக இருப்பவற்றை சுத்த செய்து எடுத்து வைப்பது போன்ற எளிய பணிகள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலின் தசை செயல்பாட்டை வலுப்படுத்த உதவுகிறது.

மாலை நேரத்து வாக்கிங்: மாலை நேரத்தில் நடைபயிற்சி செல்லுவது, நாள் முழுவதும் ஏற்பட்ட அழுத்தத்திலிருந்து ஓய்வளித்து, ஸ்டெப்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஒரு சுலபமான மற்றும் மகிழ்ச்சியான வழியாகும்.

பணியிடத்தில் நடக்கவும்: அலுவலகத்தில் லிஃப்ட் தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துவது, அருகிலுள்ள இடங்களுக்கு நடந்து செல்வது போன்ற சிறிய பழக்கங்கள், 10,000 ஸ்டெப்ஸ் இலக்கை எளிதாக அடைய உதவுகின்றன. வேலைநேரத்திலும் நடைப்பயிற்சி செய்வது மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: