முடியின் முன்கூட்டிய நரையை போக்க பயனுள்ள ஆயுர்வேத வைத்தியம்!

மருத்துவர் டிக்சா பாவ்ஸரின் கூற்றுப்படி, “முடி முன்கூட்டியே நரைப்பதை ஆயுர்வேதத்தின் உதவியுடன் தடுக்கலாம்”.

haircare
Best Ayurvedic remedies to prevent premature graying of hair

நம் தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், கருப்பாகவும் இருக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால், வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களால், முடி முன்கூட்டியே நரைப்பது இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாகிவிட்டது.

முடிக்கு வண்ணம் பூசுவது அந்த வெள்ளி இழைகளை சிறிது நேரம் மறைக்கக்கூடும், இது ஒரு தற்காலிக தீர்வு. இருப்பினும், நீங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் வீட்டிலேயே சில எளிய வைத்தியம் மூலம் உங்கள் தலைமுடியை முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கலாம்.

ஆயுர்வேத நிபுணரான மருத்துவர் டிக்ஸா பாவ்ஸரின் கூற்றுப்படி, “முன்கூட்டிய முடி நரைப்பதை ஆயுர்வேதத்தின் உதவியுடன் மாற்றலாம்”. உங்கள் கூந்தல் சாம்பல் நிறமாக மாறுவதைத் தடுக்க, நிபுணர் சில எளிய வைத்தியங்களைப் பகிர்ந்துள்ளார். பாருங்கள்.

பளபளப்பான, கருப்பு முடிக்கு ஆயுர்வேத வைத்தியம்!

* தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது மிக முக்கியமானது. “வாரத்திற்கு இரண்டு முறை” முடிக்கு எண்ணெய் தடவுவம்.

* இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு உணவுகளை உட்கொள்ளுங்கள். “அதிகப்படியான காரம், உப்பு, பொரித்த, புளித்த, பழைய உணவுகள், காஃபின் பானங்கள் மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்”

* இரவில் தூங்கும் முன், இரண்டு துளிகள் பசுவின் நெய்யை இரு நாசியிலும் போடவும்.

* நரை முடிக்கு நெல்லி சிறந்தது. “குறிப்பாக குளிர்காலத்தில் இதை தவறாமல் உட்கொள்ளுங்கள்”

* சீக்கிரம் தூங்குவது மிகவும் முக்கியம். “உங்கள் தூக்கத்தின் தரம் எவ்வளவு சிறந்ததோ, உங்கள் முடியின் தரம் அவ்வளவு சிறந்தது. இரவு 10 மணிக்குள் படுக்கையில் இருக்க முயற்சி செய்யுங்கள்”

* கறிவேப்பிலை, எள், நெல்லிக்காய், பாகற்காய், பசு நெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* சூடான நீரால் முடியை கழுவ வேண்டாம்.

மேலும், மருத்துவர் பாவ்சர், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி, முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கப் பயன்படும் எளிய மருந்துகளையும் பகிர்ந்து கொண்டார். அவர் அதை பயன்படுத்த பரிந்துரைத்தார்,

கற்றாழை ஜெல்: தேங்காய் எண்ணெயுடன், கற்றாழை ஜெல் கலந்து தலைமுடிக்கு தடவவும்.

ஆம்லா (இந்திய நெல்லிக்காய்) தூள்: 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை, 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கருப்பாகும் வரை சூடாக்கவும். குளிர்ந்த பிறகு உங்கள் தலைமுடியில் தடவவும்.

கறிவேப்பிலை: ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, தேங்காய் எண்ணெயுடன் கருப்பாகும் வரை சூடாக்கவும். அதை ஆறவைத்து தலையில் தடவவும். “உங்கள் உணவின் ஒரு பகுதியாக நீங்கள் கறிவேப்பிலையையும் உட்கொள்ளலாம். இதில் மல்டிவைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன, அவை நரைப்பதைத் தடுக்க உதவுகின்றன என்று மருத்துவர் பாவ்ஸர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Best ayurvedic remedies to prevent premature graying of hair

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com