தேய்ச்சு தேய்ச்சு கை வலிக்குதா? உடம்பு நோகாம பாத்ரூம் பளீச்; ஈஸி டிப்ஸ் பாருங்க!

வீடு வந்த விருந்தினர்கள் கழிவறையை பயன்படுத்தும் போது அதன் தூய்மையை கவனிப்பார்கள். இது நம் வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பாக இருக்கிறது. அதை சுலபமாக சுத்தம் செய்ய ஒரு எளிய டிப் பற்றி பார்க்கலாம்.

வீடு வந்த விருந்தினர்கள் கழிவறையை பயன்படுத்தும் போது அதன் தூய்மையை கவனிப்பார்கள். இது நம் வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பாக இருக்கிறது. அதை சுலபமாக சுத்தம் செய்ய ஒரு எளிய டிப் பற்றி பார்க்கலாம்.

author-image
Mona Pachake
New Update
download - 2025-10-06T131005.729

நம்மில் பலருக்கும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், கழிவறையை சுத்தமாக வைத்திருப்பது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாகும் என்பதை சிலர் தவிர்த்து விடுகிறோம். உண்மையில், ஒரு வீட்டின் சுகாதார நிலையை அறிய, அதன் கழிவறையின் தூய்மை நிலை போதுமானது என்று கூறலாம்.

Advertisment

ஏன் கழிவறை தூய்மையானதாக இருக்க வேண்டும்?

நோய்கள் பரவாமல் தடுக்கும்:
கழிவறை சுத்தமாக இல்லையெனில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றால் நோய்கள் பரவ வாய்ப்பு அதிகம்.

மணமின்றி மகிழ்ச்சி:
தூய்மையாக வைத்திருக்கும் கழிவறை கெட்ட வாசனையின்றி நம்மை மனதளவில் நிம்மதியடையச் செய்யும்.

விருந்தினர்களுக்கான மரியாதை:
வீடு வந்த விருந்தினர்கள் கழிவறையை பயன்படுத்தும் போது அதன் தூய்மையை கவனிப்பார்கள். இது நம் வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

Advertisment
Advertisements

toilet

தூய்மையை பேணும் வழிமுறைகள்:

  • கழிவறையை தினமும் ஒரு முறை கழுவி வைக்க வேண்டும். பிளஷ் பண்ணிய பிறகும் ஒரு முறை தண்ணீரால் சுத்தம் செய்யலாம்.
  • வாரத்திற்கு ஒருமுறை டாய்லெட் கிளீனர் யன்படுத்தி பவுல், சீட், மற்றும் ஹாண்டில் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். கழிவறை மேல், அருகிலுள்ள சுவர்கள் மற்றும் தரையை கூட சுத்தம் செய்ய வேண்டும்
  • கழிவறைக்கு தனியான brush, துடைக்கும் துணி, மற்றும் சுத்தி திரவம் வைத்திருக்க வேண்டும். அந்த சாதனங்களை வேறு இடங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.
  • கழிவறையில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். இதனால் ஈரப்பதம் குறையும், பூஞ்சை வளர்வதற்கான வாய்ப்பு குறையும்.
  • கழிவறை பயன்படுத்திய பிறகு நன்கு சோப்பால் கைகளை கழுவ வேண்டும். இது ஒரு நல்ல பழக்கமாகும்.

ஒரு சிம்பிள் டிப்!

வீட்டில் எந்த இடமாக இருந்தாலும் அது சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் கழிவறை மட்டும் சுத்தமாக இல்லையெனில், அது வீட்டு சுகாதாரத்தை முற்றிலும் பாதிக்கக் கூடியது. குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் அதனைக் பயன்படுத்துவதால், தூய்மையைப் பேணுவது ஒரு பொறுப்பாகும். இதை எப்படி சுலபமாக செய்யலாம் என்று பார்க்கலாம். 

harpic

இதற்க்கு முதலில் கொஞ்சம் துணி துவைக்கும் சோப்பு தூள் எடுத்து அதனுடன் கொஞ்சம் சோடா உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் கொஞ்சம் ஹார்பிக் சேர்க்க வேண்டும். இப்போது ஒன்றரை க்ளாஸ் தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளலாம். இதை உங்கள் கழிவறையில் ஊற்றி அங்கு ஊற விட்டு பிறகு அதாஉ ஸ்க்ரப் செய்து பிறகு கழுவிவிட்டால், பளீச்சென்று சுத்தமாகிவிடும். இந்த முறையை பயன்படுத்தினால் உங்கள் ஹார்பிக் நீண்ட நாட்களுக்கு வரும், அதே நேரத்தில் அதிக கெமிக்கல் இல்லாமல் உங்கள் பாத்ரூமை சுத்தமும் செய்யலாம். 

தூய்மை என்பது ஒருவரது வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. கழிவறை தூய்மையாக வைத்திருப்பது எளிய ஒரு பணியாகத் தோன்றலாம். ஆனால், அதன் முக்கியத்துவம் நாளை நம் உடல் நலத்தையே தீர்மானிக்கும் அளவிற்கு இருக்கிறது. தூய்மை இருக்கின்ற இடத்தில் தான் நலமும் நிலைத்திருக்கும்!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: