/indian-express-tamil/media/media_files/2025/10/09/download-9-2025-10-09-18-05-56.jpg)
சமையல் என்பது நம்ம தினசரி வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். ஆனால், நேரம் குறைவாக இருக்கும் காலக்கட்டங்களில் சமையல் வேலையை சுலபமாகவும் சுறுசுறுப்பாகவும் முடிக்க சில எளிய யோசனைகள் மிகவும் உதவியாக இருக்கும். சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்வது, மசாலா பொருட்கள் சரியான முறையில் சேமிப்பது, காய்கறிகளை வேகமாக நறுக்கும் வழிகள், உணவின் சுவையை அதிகரிக்க சிறிய குறிப்புகள் என, சமையலின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் பின்பற்றக்கூடிய சின்னச் சின்ன டிப்ஸ் நிறைய இருக்கின்றன.
இவை உங்கள் சமையல் அனுபவத்தை எளிமையாக்குவதோடு மட்டுமல்லாமல், சுகாதாரத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும். இங்கே, சமையலுக்கு உதவியாக இருக்கும் சிறந்த குறிப்புகள் மற்றும் சமையலறை டிப்ஸ்களைத் தமிழில் விரிவாகப் பார்ப்போம்.
எறும்புக்கு விக்ஸ்:
சின்னதாகத் தோன்றும் எறும்புகள் உணவுப் பொருட்களில் கலந்து அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் கொண்டு சேர்க்கின்றன. அதனால் சமையலறை, இனிப்புப் பாட்டில்கள், மிதிவெஞ்சி போன்ற இடங்களில் சுத்தம் முக்கியம். எளிய இயற்கை வழிகளில், தேங்காய் எண்ணெய், கற்பூரம், எலுமிச்சை போன்றவற்றின் உதவியால் எறும்புகளின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
அதை மீறியும் எறும்பு வந்தால் ஒரு விக்ஸ் பாட்டில் போதும். உங்கள் வீட்டில் எறும்பு வரும் இடங்களில் கொஞ்சம் விக்ஸ் எடுத்து லேசாக பூசி விட்டால் எறும்பு இருந்த இடமே தெரியாமல் போய்விடும். இதை செய்தால் கரப்பான் பூச்சிகள் கூட வராது.
பாலில் தண்ணீர்
இன்றைய காலத்தில் தூய பாலைப் பெறுவது கடினமான விஷயமாகியுள்ளது. பல சந்தைகளிலும், பாலில் தண்ணீர் கலந்து விற்கப்படும் நிலை காணப்படுகிறது. இந்த வகையான பால் கலவையானதா, தூயதா என்பதை வீட்டிலேயே சோதிக்க சில எளிய முறைகள் உள்ளன.
முதலில் உங்கள் பாலை எடுத்து அதை சபாபதி உருட்டும் கட்டையின் மீதி ஊற்றி பார்க்க வேண்டும். அது வழிந்த ஓடிய பிறகு வெள்ளையாக திட்டு திட்டாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது கலப்படம் இல்லாத பால் ஆகும்.
பாலை வீண்ணாக்க கூடாது
ஒரு பால் பாக்கெட் வாங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதென்றால் அந்த பால் நல்ல பாலா இல்லையா என்று கண்டுபிடிப்பதற்கு கொஞ்சம் ஒரு குழி கரண்டியில் எடுத்து அதை அடுப்பில் காய்த்து பாருங்கள். அது கெட்டு போய் இருந்தால் தேவை இல்லாமல் கேஸ் வீணாக்காமல் கண்டுபிடித்து விடலாம்.
கொத்தமல்லி ஸ்டோரிங்
கொத்தமல்லி என்பது தமிழர் சமையலில் மிக முக்கியமான இடம் பெற்றிருக்கும் ஒரு நறுமண மூலிகை. இது உணவுக்கு தனியான வாசனை மற்றும் சுவையை கூட்டும் பல்வேறு மருத்துவ நன்மைகளையும் கொண்டுள்ளது. இதை ஒரு டப்பாவில் வைக்கும் முன் ஒரு துணியில் சுற்றி நடுவில் ஒரு மரத்தால் ஆனா ஸ்பூனை வைத்து வைக்க வேண்டும். இப்படி வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
சிம்பிள் ட்ரைபாட்
நீங்கள் ஒரு யூடியூப் சேனல் வைத்திருந்தால், அனால் உங்களிடம் ட்ரைபாட் இல்லை என்றால் கவலை படாதீர்கள். உங்கள் போனை ஒரு கரண்டியில் ரப்பர் பேண்ட் போட்டு கட்டி அந்த கரண்டியை அரிசியில் வைத்தால் அது ஒரு ட்ரைபாடாக மாறிவிடும்.
இந்தச் சிறிய, ஆனால் பயனுள்ள சமையல் குறிப்புகள் உங்கள் தினசரி சமையலை வேகமாகவும், சுகாதாரமாகவும் மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு முறையும் சமையலறையில் காலம் செலவிடும் போது, இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி பாருங்கள் – நேரத்தை மிச்சப்படுத்தலாம், சீராக சமைக்கலாம், சுத்தமாக பராமரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களுக்கும் சமைப்பவருக்கும் மகிழ்ச்சியான அனுபவமாக சமையல் மாறும். சிறிய மாற்றங்களே பெரிய மாறுதல்களாக அமையக்கூடியது. எனவே, இந்த யோசனைகளை உங்கள் சமையல் பயணத்தில் சேர்த்துக்கொண்டு சுவையாகவும், திறமையாகவும் சமையலாற்றத்தை மேலும் மேம்படுத்துங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.