பொடுகு என்பது அதிகப்படியான எண்ணெய் மற்றும் இயற்கையாக நிகழும் பூஞ்சையால் ஏற்படும் ஒரு தோல் நிலை. இது எரிச்சலை ஏற்படுத்துகிறது.
தூய கற்பூர பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையை, ஷாம்பு போடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தலைமுடியில் தடவுவது பொடுகுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும், என்கிறார் பிளாகர் தீப்தி கபூர்.
இது எப்படி வேலை செய்யும்?
கற்பூரம் குளிர்ச்சி தன்மை கொண்டது. இது வீக்கத்தையும் கிருமிகளையும் எதிர்த்துப் போராடும் ஒரு சூப்பர் ஹீரோ போன்றது. பொடுகுக்கு, இது உங்கள் உச்சந்தலையை ஆற்றவும், அந்த மோசமான பூஞ்சைகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் போன்றது, இது உங்கள் தலைமுடியை ஆழமாகச் சென்றடையும். இது கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது, மேலும் வறண்ட உச்சந்தலையில் உதவுகிறது, ஆனால் பொடுகு இருந்தால், நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
பொடுகுக்கு கற்பூரத்தைப் பயன்படுத்த விரும்பினால், பொடுகுக்கான அடிப்படைக் காரணங்களை நீங்கள் கவனிக்க வேண்டும், என்று டாக்டர் ஜதின் மிட்டல் (co-founder, cosmetologist, and skin expert from Abhivrit Aesthetics, New Delhi) கூறினார்.
உங்களுக்கு பொடுகு மற்றும் கடுமையாக வறண்ட சருமம் இருந்தால், இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம். செபோர்ஹோயிக் டெர்மடிடிஸ் உள்ளவர்கள் தங்கள் உச்சந்தலையில் எண்ணெய்களைப் பயன்படுத்தும்போது மிகவும் எரிச்சலடையக்கூடும்.
நீங்கள் அனைத்தையும் தொடங்குவதற்கு முன், உங்கள் சருமம் அதற்கு ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்ய, இந்த கலவையை ஒரு சிறிய இடத்தில் சோதிப்பது புத்திசாலித்தனம். இந்த கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை, பொடுகுக்கு எதிரான உங்களின் ரகசிய ஆயுதமாக இருந்தாலும், ஒவ்வொருவரின் தலைமுடியும் வித்தியாசமாக இருக்கும்.
சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் உங்கள் பொடுகுக்கான அடிப்படைக் காரணத்தை ஆராயுமாறு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேங்காய் எண்ணெய் போன்ற பொருத்தமான பொருட்களை நீங்கள் இந்த வழியில் தேர்வு செய்ய முடியும். இதைப் பலமுறை பயன்படுத்தினாலும், நீங்கள் இன்னும் எந்த முன்னேற்றத்தையும் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் உங்கள் தோல் மருத்துவரைப் பார்க்கவும், என்று டாக்டர் மிட்டல் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“