சென்னையின் கிழக்கு கடற்கரையில சாலையில், கடலை ஒட்டி அமைந்துள்ள திறந்த வெளியில் ஒரு ரொமேன்டிக் டின்னர் சாப்பிட்டிருக்கிறீர்களா? அல்லது நகரத்தின் உயரமான கட்டிடத்தில், ஓப்பன் ரெஸ்டாரென்டில் ஒரு மாலையை கழித்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இதோ சென்னையின் 6 ரெஸ்டாரென்ட்களில் பட்டியல் இங்கே.
பே வியூ, தாஜ் ஃபிஷர்மேன் கோவ்:
கடற்கரையில் ஓலை கூரையின் கீழ் கடல் காற்றை உணர்ந்த படி இங்கு கிடைக்கும் ஃப்ரெஷான கடல் உணவுகளை சாப்பிடலாம். கடல்சார் உணவு வகைகளும் செட்டிநாடு உணவு வகைகளும் இங்கு ஸ்பெஷல். இங்கு கடலுக்கும் உங்களுக்கும் நடுவில் எதுவும் இருக்காது.
அக்வா, தி பார்க்:
அக்வா, தி பார்க் ரெஸ்டாரென்ட் ,லாஞ்ச் போன்ற டைனிங் செட்டப் கொண்டது.
மேலும் ஹோட்டலின் நீச்சல் குளத்தின் அருகே டைனிங் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ரொமேன்டிக் டேட்டுக்கு இது சிறப்பான இடம். கிரில், தந்தூரி, பிளேட்டர், கெபாப் என உணவு வகைகள் இங்கு அதிகம் தயாரிக்கப்படுகின்றது.
கோகோமோ, இன்டெர்கான்டினென்டல் ரெசார்ட், மஹாபலி புரம்
சென்னையின் முதல் டிக்கி பார் இங்கு தான் இருக்கிறது. சர்வதேச அளவில் இருந்து உள்ளூர் வரையிலான உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.
இடம்: நெம்மேலி, மஹாபலிபுரம்
உந்த அப் நார்த், ரெய்ன் ட்ரீ அண்ணாசாலை:
சென்னையின் அண்ணாசாலையில், எந்த வித ஆரவாரமும் இன்றி திறந்த வெளியில், இருக்கும் ரெஸ்டாரென்ட் தான் உந்த அப் நார்த் ரெஸ்டாரென்ட் .
ஷோர்பாஸ் மற்றும் லஹோரி சீக் உணவு வகைகள் இங்கு ஸ்பெஷல்.
அபோ சீ லெவல், ரெயின் ட்ரீ, செயின்ட் மேரிஸ் சாலை
சென்னையில் உயரமான கட்டிடத்தில் அமைந்திருக்கிறது இந்த ரூஃப் டாப் ரெஸ்டாரென்ட். சென்னை நகரை முழுமையாகக் காணலாம். இவர்களின் காக்டெயிலோடு, வித்தியாசமான வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு உணவு வகைகள் இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.
இடம்: செயின்ட்மேரிஸ் சாலை
கிப்லிங் கஃபே:
கிப்லிங் கஃபே, ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ளது.
இதன் ஸ்பெஷாலிட்டி ரொமேன்டிக்காக, பூங்காவுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இதன் செட் அப்தான். மர அடுப்பில் செய்யப்பட்ட பீட்சா இங்கு கிடைக்கும் மேலும் தாய்லாந்து உணவு வகைகள் கிப்லிங்க் கஃபேவின் ஸ்பெஷாலிட்டி.