நாம் கொண்டைக்கடலையில் சூப்பரான கெபாப் செய்ய முடியும். இது மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட மிகவும் சரியான தேர்வு. இதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
கருப்பு கொண்டைக்கடலை – 250 கிராம்
2 உருளைக் கிழங்கு
பொடியா நறுக்கிய வெங்காயம் – அரை கப்
சீரகத் தூள்- 1 ஸ்பூன்
தனியாத் தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி: தேவையான அளவு
மிளகாய் தூள்- 1 ½ ஸ்பூன்
கரம் மசாலா- அரை ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள்
செய்முறை
கருப்பு கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். உருளைக்கிழங்கை அவிக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
தற்போது இந்த கலவையில் நறுக்கிய வெங்காயம், சீரகத் தூள், தனியாத் தூள், மஞ்சள் பொடி, கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்ததாக கெபாப் போல் செய்து, அதை தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி இருபக்கமும் பொறித்து எடுக்கவும். சுவையான கெபாப் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“