டைப் 2 நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோய். இது உடலில் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை சரியாகக் கட்டுப்படுத்த இயலாமையால் ஏற்படுகிறது.
Advertisment
உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் உற்பத்தி ஆனாலும், செல்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. காலப்போக்கில், கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம். இந்த டைப் 2 நீரிழிவானது இனிப்பு சாப்பிடுவதால் மட்டும் வருவதல்ல. அதேபோல இனிப்பே சாப்பிடாதவர்களுக்கு இந்த வகை நீரிழிவு வராது என்றும் அர்த்தமில்லை.
ஆனால், ப்ரீ டயாபட்டிஸ் எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளோரும், குடும்பத்தில் நீரிழிவு பின்னணி கொண்டவர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், நீரிழிவு வந்து, அதற்கு சரியான சிகிச்சை எடுக்காதவர்கள் எல்லோரும் இனிப்புகள் சாப்பிடுவதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
அப்படிப்பட்டவர்களுக்காக ஒரு அதிசய பழம் இங்கே இருக்கு! பாருங்க