பெண்களே... முடி சும்மா பஞ்சு மாதிரி சாஃப்ட் ஆக இருக்கணுமா? வீட்டில் இருக்கும் இந்தப் பொருள் போதும்!

கண்டிஷனர்களில் அதிக அளவு இரசாயனங்கள் இருப்பதால் முடியின் ஆரோக்கியத்தை அது கெடுக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த பதிவில் இரசாயனங்கள் இல்லாத ஒரு ஹேர் பேக் பற்றி பார்க்கலாம். 

கண்டிஷனர்களில் அதிக அளவு இரசாயனங்கள் இருப்பதால் முடியின் ஆரோக்கியத்தை அது கெடுக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த பதிவில் இரசாயனங்கள் இல்லாத ஒரு ஹேர் பேக் பற்றி பார்க்கலாம். 

author-image
Mona Pachake
New Update
download (84)

பெண்களுக்கு முடி என்பது ஒரு அழகுக் குறியீடு மட்டுமல்லாமல், நம்பிக்கையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. முடி வளர்ச்சி இயற்கையாகவே நிகழும் ஒரு செயல் ஆனால் பல காரணிகள் அதை பாதிக்கக்கூடும். பொதுவாக, ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடி strands வரை உதிர்வது இயல்பானது. ஆனால் வளர்ச்சி சரியாக நடைபெற, சில முக்கிய காரணிகளைப் புரிந்து கொள்வது அவசியம்.

Advertisment

முதலில், ஹார்மோன்கள் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. குறிப்பாக எஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டெரோன் என்ற பெண்மான ஹார்மோன்கள், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. சில சமயங்களில், பிசிஓஎஸ் , சிதைந்த தைராய்டு சுரப்பி போன்ற ஹார்மோன்களுடன் தொடர்புடைய சிக்கல்கள், முடி உதிர்வை ஏற்படுத்தலாம். இரண்டாவது, உணவு பழக்கங்கள். ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் – பிரத்யேகமாக புட்டின், வைட்டமின் பி, டி, இரும்புச் சத்து, சிங்க் மற்றும் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் – முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. போஷகச் சத்துகள் குறைந்தால், முடி வளர்ச்சி மந்தமாகும்.

hair

மூன்றாவது, மருத்துவமுறைகள் மற்றும் மன அழுத்தம். சில மருந்துகள், போலி ஹார்மோன் மருந்துகள் அல்லது கீமோதெரபி போன்றவை முடி உதிர்வுக்கு காரணமாகின்றன. அதேபோல், நீண்டகால மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவை முடி வளர்ச்சியைத் தடுக்கின்றன. முடி வளர்ச்சி ஒரு சீரான சுகாதார வாழ்க்கை முறை, சீரான உணவு, மனநல பராமரிப்பு, மற்றும் இயற்கையான பராமரிப்பு வழிமுறைகளின் கலவையாகும். எந்தவொரு மாற்றமும் உடனடி விளைவைக் கொடுக்காது – ஆனால் தொடர்ச்சியான பாதுகாப்பு முடியை கூர்மையாக்கி, வளமாக வளர உதவும்.

ஆனால் நம்மில் ஒரு சிலருக்கு முடி நன்கு வளர்ந்தாலும் அது சாஃப்ட்டாக  வளர வேண்டும் என்று நினைப்போம். அதற்க்கு நீங்கள் பயன்படுத்த வேண்டியது கண்டிஷனர் தான். அனால் அதில் அதிக இரசாயனங்கள் இருப்பதால் முடியின் ஆரோக்கியத்தை அது கெடுக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த பதிவில் இரசாயனங்கள் இல்லாத ஒரு ஹேர் பேக் பற்றி பார்க்கலாம். 

Advertisment
Advertisements

ஒரு சிம்பிள் ஹேர் பேக்!

முதலில் இந்த ஹேர் பேக் செய்வதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். அது கருவேப்பிலை, வெந்தயம் மற்றும் மருதாணி மட்டுமே. 

கருவேப்பிலை - கருவேப்பிலையில் அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் பி கொண்டு முடி வேர்களை ஊட்டமளிக்கிறது. இது முடி வலிமை பெற மற்றும் மென்மையாய் மாற உதவுகிறது.

Curry leaves

வெந்தயம் - வெந்தயம் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, உலர்ச்சி மற்றும் உடைதல்களை குறைக்கிறது. இதனால் முடி இயற்கையாக மென்மையடையும். இதில் உள்ள புரோட்டீன் மற்றும் நிகோட்டினிக் ஆசிட் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் முடி வேர்களை வலுப்படுத்துகிறது.

Fenugreek

மருதாணி - மருதாணி நம் தலைமுடி தோலை "கூலிங்" செய்கிறது. இதனால், எண்ணெய் சுரப்பு சமநிலைப்படுத்தப்படுகிறது. இது முடியை வாடாததற்கும், மென்மையாக மாறுவதற்கும் உதவுகிறது. மருதாணி, முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைக்கிறது. வேர்கள் வலுவடைந்தால், கூந்தல் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.

henna

செய்முறை

ஒரு கைப்புடி அளவிற்கு கருவேப்பிலை எடுத்து அதனுடன் ஒரு இரவு முழுவதும் ஊறிய வெந்தயம் சேர்த்து, அதனுடன் கடைசியாக மருதாணியும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல அரைத்து நன்கு ட்ரையான முடியில் அப்ளை செய்து ஷாம்பு கூட போடாமல் குளித்தால் முடி அடர்த்தியாகவும் இருக்கும், அதே நேரத்தில் நன்கு சாஃப்ட்டாகவும் இருக்கும்.

கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க மக்களே!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: