Advertisment

50 வயதுக்கு மேல் இந்த ஜூஸ் பெஸ்ட்: ஏன் தெரியுமா?

50 வயதிற்கு மேல் குடிக்க வேண்டிய சிறந்த ஜூஸ்களை உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வகை ஜூஸ்களைக் குடித்தால் தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை பெறலாம்.

author-image
WebDesk
New Update
Best Healthy juice for above 50 aged persons, Best Healthy juice, பச்சை காய்கறிகள் ஜூஸ், கோதுமை புல் ஜூஸ், ப்ரோகோலி ஜூஸ், 50 வயதுக்கு மேல் பெஸ்ட் ஜூஸ், Kale Juice, Wheat grass juice, Tamilnadu, Healthy juice for above 50 aged, Tamil Indian Exrpess

பொதுவாக ஜூஸ் என்றாலே சர்க்கரை கலந்த பழம் ஜூஸ் என்றுதான் நினைவுக்கு வரும். பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து சர்க்கரை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் ஜூஸ் உடலுக்கு எளிதான, விரைவான வழியில் ஏராளமான பயனுள்ள ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

Advertisment

சில பழச்சாறுகள் ஆரோக்கியமானவை என்று சந்தையில் விற்கப்படுகின்றன. ஆனால், அதில் ஏராளமாக சர்க்கரை சேர்க்கப்பட்டு மிகக் குறைவான ஊட்டச்சத்துகளுடன் தயாரிக்கப்படுறது.

50 வயதிற்குட்பட்டவர்கள் ஏன் ஆரோக்கியமான ஜூஸ் குடிக்க வேண்டும் என்றால், ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதற்கான எளிதான் வழி என்பதுதான் முக்கிய காரணம். நீங்கள் வயதாகும்போது, உடல்நிலை மாற்றம் மற்றும் உடல்நல பிரச்னைகளை எதிர்த்துப் போராட வேண்டும். அதனால், அதற்கு ஒரு சிறந்த ஜூஸ் தேவை.

ஊட்டச்சத்து நிபுணர் பிளாங்கா கார்சியாவின் கூறுகையில், “50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சிறந்த ஜூஸ் என்றால், சர்க்கரை இல்லாமல் ஃபிரஷ்ஷான பழங்கள், காய்கறிகளின் கலவையுடன் தயாரிக்கப்படுவதே சிறந்த ஜூஸ்.” என்கிறார்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெஜிடபுள் ஜூஸ் ஆரோக்கியமானது.

வெஜிடபுள் ஜூஸ்

பொதுவாக ஜூஸ் என்றாலே பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது என்ற எண்ணமே நிலவுகிறது. ஆனால், காய்கறி மூலம் மிகவும் குறைவான வகை ஜூஸ்களே தயாரிக்கப்படுகின்றன. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பழச்சாறு நன்மை பயக்கும் என்றாலும் அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

அதனால், இரத்தத்தில் சர்க்கரையின் தீவிரத்தை குறைக்க, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காய்கறி ஜூஸை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், பழச்சாறுகளை விட நார்ச்சத்து குறைந்த சர்க்கரையே உள்ளது.

எல்லா வயதினருக்கும் ஃபைபர் கண்டெண்ட் முக்கியமானது. இருப்பினும், 50 வயதிற்கு மேல் ஃபைபர் மிகவும் முக்கியமானது. வயதாகும்போது, செரிமானம் மாறுகிறது. செரிமானம் ஒழுங்காக இருப்பது மிகவும் கடினம். உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உங்கள் செரிமான ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளவும், வயது தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

காய்கறி சாறு குடிப்பது நார்ச்சத்து உட்கொள்வதை அதிகரிக்க எளிதான வழி, ஆனால், நீங்கள் மொத்த காய்கறிகளையும் ஜூஸாக குடிக்கக்கூடாது.

சில பழம் ஜூஸ்களில் முதுமையுடன் தொடர்புடைய குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

  1. பச்சை காய்கறி ஜூஸ்

பச்சை காய்கறிகள் ஜூஸ் குடிப்பது இதய ஆரோக்கியத்திற்கு உதவுவதாக அறியப்படுகிறது. இது 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும், ஏனெனில் அவர்களின் இதயம் வயதுக்கு ஏற்ப பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

பயோமெடிக்கல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலின் ஆய்வில், 3 மாதங்களுக்கும் மேலாக கேல் ஜூஸை உட்கொண்ட ஆண்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் (எல்டிஎல் கொழுப்பு) குறைந்து, எச்டிஎல் கொழுப்பின் அதிகரிப்பை அனுபவித்ததாகக் கண்டறிந்துள்ளது.

  1. கோதுமைப் புல் ஜூஸ்

கோதுமைப் புல் அதிக சுவையாக இருந்தபோதிலும், சாறு வடிவில் குடிக்க மிகவும் பிரபலமாக இருப்பதற்கு காரணம், ஒன்று, அதன் உயர் அளவு குளோரோபில் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது ஆரோக்கியமானது, வயதானவர்களுக்கு முக்கியமானது.

கோதுமை புல் பவுடர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், 10 வார காலத்தில் பெண்களுக்கு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Food Tips Healthly Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment