/indian-express-tamil/media/media_files/2025/10/09/download-2025-10-09-15-06-32.jpg)
மழைக் காலம் முற்றிலும் ஜோராகவே தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அடிக்கடி பெய்யும் மழையால் வீட்டின் சுற்றுப்புறம் மற்றும் கழிவுநீர் வடிகால் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுவே கரப்பான் பூச்சிகளுக்கு இனப்பெருக்கத்திற்கும், வீடுகளுக்குள் புகுந்து தங்கவும் ஏற்ற சூழலை உருவாக்கி வருகிறது.
சாதாரணமாக, கரப்பான் பூச்சிகள் இரவின் நேரத்தில் அதிகம் செயலில் இருப்பவை. இவை மிகவும் வேகமாக நகரும் திறனுடையதும், ஒளியைக் கண்டவுடன் ஒளிந்து கொள்ளும் குணமுடையதுமாக உள்ளன. தற்போது, பல குடியிருப்புகளில், குறிப்பாக சமையலறை, வாஷ்ரூம், கழிவறை மற்றும் கழிவுநீர் வடிகால் அருகே கரப்பான்கள் பெரிதும் காணப்படுகின்றன. சில வீடுகளில் கிணறு மற்றும் மூடிய வசதிகள் இல்லாத சாயிதிகள் வழியாகவும் இவை வீடுகளுக்குள் நுழைந்து கொள்கின்றன.
வீடுகளுக்குள் புகும் பூச்சிகள்:
கிச்சன், வாஷ்ரூம், கழிவறைகள் உள்ளிட்ட இடங்களில் கரப்பான் பூச்சிகள் பெரிதும் காணப்படுகின்றன. குறிப்பாக, இரவுகளில் இவை அத்துமீறி வீடுகளில் சுற்றித் திரிந்து உணவுப் பொருட்களில் நுழைகின்றன. இது சுகாதாரத்துக்கு பேரவலியே என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மழைக்கால தாக்கம்:
மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பது கரப்பான் பூச்சிகளின் அதிகமாவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. வீட்டின் சுத்தம் குறைவாக இருந்தாலும், இவை பெருக வாய்ப்பு உள்ளது.
தடுப்பு வழிகள்:
- உணவுப் பொருட்களை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும்
- குப்பைகளை தினமும் வெளியே போட வேண்டும்
- சிந்தைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
- மாதந்தோறும் பூச்சி ஒழிப்பு மருந்து பயன்படுத்த வேண்டும்
ஒரு சிம்பிள் டிப்!
என்னதான் நாம் சுத்தமாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் கர்ப்பங்கள் நம் வீடுகளில் அதிகமாக இருக்கும். அதை தடுப்பதற்கு இங்கு அனிதா குப்புசாமி அவர்கள் ஒரு எளிய டிப் பற்றி பேசியுள்ளார். அதை பற்றி பார்க்கலாம்.
முதலில் கொஞ்சம் பிரியாணி இல்லை மற்றும் கிராம்பு தேவை. இது இரண்டையும் அரைத்து பவுடராக செய்து அதை தண்ணீரில் கலக்கி, அந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் வீட்டில் கர்ப்பங்கள் வரும் இடங்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இப்படி செய்தால், கரப்பான் தெறித்து ஓடிவிடும். அதுமட்டுமில்லாமல், இது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்கள் வைத்து மட்டுமே செய்வதால் எந்த வித பாதிப்பும் நமக்கு இருக்காது.
கரப்பான் பூச்சிகள் பல்வேறு வகையான நோய்களை பரப்பக்கூடியவை. எனவே, வீட்டு சுத்தம் மற்றும் ஒழுங்குமுறையுடன் வாழ்வதே இதற்கான நிரந்தரத் தீர்வாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.