/indian-express-tamil/media/media_files/2025/10/10/download-13-1-2025-10-10-13-11-28.jpg)
பொதுவாக தினசரி 50 முதல் 100 முடி strands வரை உதிர்வது சாதாரணம்தான். ஆனால், ஒரே இடத்தில் கொத்துக் கொத்தாக முடி உதிர்வது? அது வெறும் இயற்கை சுழற்சி அல்ல. இது ஒரு மருத்துவ அடிப்படையிலான குறியீடு ஆக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலைமைக்கு டெலஜன் எஃப்லுவியம் என்று மருத்துவத்தில் பெயர் உள்ளது. இது ஒரு குறுகிய காலத்தில் திடீரென அதிக அளவு முடி கொட்டும் நிலையை குறிக்கிறது.
எதனால் கொத்துக் கொத்தாக முடி உதிரும்?
உடலின் உள் பதற்றம்
- இரத்த அழுத்தம், தீவிர மன அழுத்தம்
- திடீர் எடை இழப்பு அல்லது அதிகரிப்பு
- அறுவை சிகிச்சை, பிரசவம் போன்ற சூழ்நிலைகள்
சரிவிகிதமான ஹார்மோன் மாற்றங்கள்
- பெண்களில் பிரசவம் பின் நிலை
- தைராய்டு கோளாறுகள்
- பிசிஓஎஸ், மெனோபாஸ்
அக்சிடேட்டிவ் ஸ்டிரெஸ்
- மாசுபாடு, உடலுக்கு தேவையான நார்ச்சத்து குறைபாடு
- நீண்டநாளாகவே தூங்காமல் இருப்பது
போஷணை குறைபாடுகள்
- இரும்புச்சத்து குறைபாடு
- புரோட்டீன் குறைவான உணவுமுறை
- பி12, வைட்டமின் டி குறைபாடு
மருந்துகள் மற்றும் சிகிச்சைகள்
- ஆகுதி மருந்துகள்
- கிமோதெரபி
- சில மனநல மருந்துகள்
தீர்வுகள் மற்றும் பராமரிப்பு பரிந்துரைகள்
முடி உதிர்வை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது மிக முக்கியம். தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், பச்சை இலைகள், முட்டை போன்றவற்றை சேர்க்க வேண்டும். பீன்ஸ், பருப்பு, மீன் போன்ற புரோட்டீன் அதிகமுள்ள உணவுகள் முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. முடி வேர்களை உறுதி செய்ய, வாரத்தில் இரு முறை தேங்காய் எண்ணையோ அல்லது பாதாம் எண்ணையோ பயன்படுத்தி மெதுவாக ஸ்கால்ப் மசாஜ் செய்யலாம்.
அதேசமயம், மருத்துவர் பரிந்துரைக்கும் பைட்டோந்யூட்ரியன்ட் கொண்ட ஹேர் வாடமின்கள், இரும்புச்சத்து மற்றும் பி-காம்ப்ளெக்ஸ் சப்பிளிமெண்ட்களும் உதவிகரமாக இருக்கும். மனஅழுத்தமும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பதால், யோகா, மெடிடேஷன், போதுமான தூக்கம் போன்ற செயல்களை தினசரி வாழ்வில் மேற்கொள்வது அவசியம். மேலும், அதிக ஹீட் ஸ்டைலிங், ஹேர் கலரிங் போன்ற கடுமையான ஹேர் ட்ரீட்மெண்ட்களை தவிர்ப்பதும், முடியை பாதுகாக்க உதவும் முக்கியமான வழிமுறையாகும்.
ஒரு சிம்பிள் டிப்!
இதற்கான ஒரு தீர்வாக ஒரு சிம்பிள் டிப் உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம் வாங்க. இதை செய்வதாக்ற்கு முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 ஸ்பூன் அளவு பச்சை பயிறு மற்றும் கொஞ்சம் புதினா இலைகள் சேர்க்க வேண்டும். இது கூடவே ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரை இப்போது அங்கு கொதிக்க விட வேண்டும்.
இப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ப்ளேராக சுண்டி வரும் பொது அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது இது கூடவே கொஞ்சம் ஆப்பிள் தோல் சேர்த்து ஒரு பேஸ்ட் போல அரைத்து எடுக்க வேண்டும். அந்த பேஸ்ட்டை உங்கள் தலையில் ஹேர் மாஸ்க்காக போட்டு வந்தால், கண்டிப்பாக உங்கள் முடி உதிர்வு சட்டுனு குறைந்துவிடும்.
கொத்துக் கொத்தாக முடி உதிர்வது, இயற்கை இல்லாத ஒரு உடல் அறிகுறி. அதை சிறிது கவனத்துடன் பார்த்தால், ஆரம்ப கட்டத்திலேயே தடுக்கவும் – திரும்ப வளர்க்கவும் முடியும். உணவு, தூக்கம், மனநிலை என அனைத்தும் முடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.