/indian-express-tamil/media/media_files/2025/10/10/download-10-2025-10-10-11-34-19.jpg)
வீட்டில் நிம்மதியாக இருப்பதற்கே இடமில்லாமல், எங்கு பார்த்தாலும் கரப்பான்பூச்சிகள் ராஜ்யம் நடத்த ஆரம்பித்தாலே, அவைகளை விரட்ட எவ்வளவோ ஸ்ப்ரே, சாக்பீஸ், பெஸ்டிசைட்ஸ் எனப் பல கெமிக்கல்களைக் கையில் எடுத்திருப்போம். ஆனால் பல நாட்கள் ஓடினாலும், அவைகள் மறுபடியும் அதே இடத்திலே வந்து “அதிகாரம்” செலுத்தத் தொடங்கும்.
அதிலும் சமையல் அறையில் சாப்பாடு பொருட்கள் இருப்பதால், கெமிக்கல் ஸ்ப்ரே அடிக்க மனசே வராது. இந்த நிலையில்தான், நம்ம அஞ்சறைப் பெட்டியில் எப்போதும் இருப்பது போலச் சாதாரணமான இரண்டு பொருட்கள் – சர்க்கரை மற்றும் கிராம்பு – கரப்பான்பூச்சிகளை விரட்ட உதவும் ஒரு இயற்கை தீர்வாக மாற முடியும் என்பது உற்சாகமான செய்தி.
இனிப்பு வாசனையால் ஈர்க்குது, கார வாசனையால் விரட்டுது!
சர்க்கரை ஒரு விருந்துக்காக அழைக்கும் இனிப்பு வாசனையை விட்டெடுக்கிறது. இந்த வாசனைக்கேட்டாலே, கரப்பான்பூச்சிகள் அந்த இடத்துக்கே சிக்கிச் செல்வது உண்டு. ஆனால் அதே சமயம், கிராம்பில் உள்ள காரத் தன்மையான எண்ணெய், அவைகளுக்கு ஒரு வித அலர்ஜியை ஏற்படுத்தி, அந்த இடத்திலிருந்து தப்பிக்க வைக்கும்.
எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்:
- சர்க்கரை – 2 ஸ்பூன்
- கிராம்பு – 10 முதல் 15 எண்ணிக்கை
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
- சர்க்கரையை மிக்ஸியில் நைஸ் பொடியாக அரைக்கவும்.
- அதனுடன் கிராம்பையும் சேர்த்து, சீராக அரைத்துக்கொள்ளவும்.
- இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சர்க்கரை கரைந்ததும், ஒரு டீ வடிகட்டியில் வடிகட்டி, அந்த திரவத்தை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
எப்படி பயன்படுத்துவது?
- இந்த இயற்கை ஸ்ப்ரேயை கரப்பான்பூச்சிகள் அதிகம் காணப்படும் இடங்களில், குறிப்பாக கிச்சன் சிங்க் ஓட்டை, கேஸ் சிலிண்டர் கீழ், குப்பைத் தொட்டி பக்கம், சுவரோரங்கள், அலமாரிக்குள் மற்றும் சமைக்கும் மேடையில் தினமும் இரவு நேரத்தில் ஸ்ப்ரே செய்யலாம்.
- இது இயற்கையானது என்பதால், சமையல் மேடையில் ஸ்ப்ரே செய்த பின், காலை நேரத்தில் ஒரு ஈரத்துணியால் மேடையை சுத்தம் செய்தாலே போதும்.
முக்கிய குறிப்புகள்:
- இந்த ஸ்ப்ரேயில் எந்தவிதமான கெமிக்கல் சேர்க்கைகள் இல்லாததால், மூச்சுத் திணறல், தோல் எரிச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படாது.
- குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கும் பாதுகாப்பானது.
- வாரத்தில் இரு முறை தொடர்ச்சியாக இந்த முறையைப் பயன்படுத்தினால், சில நாட்களிலேயே உங்கள் வீட்டில் இருந்து கரப்பான்பூச்சிகள் காணாமல் போவதற்கான வாய்ப்பு அதிகம்.
இயற்கை முறையில் வீட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு, இந்த சர்க்கரை + கிராம்பு ஸ்ப்ரே ஒரு சிறந்த, சுலபமான மற்றும் செலவில்லாத தீர்வாக அமைகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.