best nature place : இந்தியாவின் பல இடங்களை இயற்கை நமக்காக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வழக்கமான சம்மர் சுற்றுலா இடங்கள் அல்லாமல், இதுமாதிரியான இடங்களுக்கு சம்மரில் விசிட் அடிப்பது சுவாரஸ்யமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.
இயற்கை எழில் மிக்க மலைப் பகுதிகள், பேரழகை உள்வாங்கியுள்ள கடற்கரைகள், ஆபத்தையும், அழகையும் ஒருங்கே கொண்டுள்ள பள்ளத்தாக்குகள், இயற்கையோடு பின்னி பிணைந்துள்ள காடுகள், ஆர்ப்பரித்து பாயும் நதிகள் என்று உலகில் ரசிப்பதற்கும், இயற்கையோடு வாசம் செய்வதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. அவற்றில் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
நகரத்தின் மக்கள் நெருக்கடி, வெப்பம், புகை ஆகியவற்றிலிருந்து விலகி உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சிக்கு மலைவாழிடங்களுக்கு சுற்றுலா செல்வது என்பது ஒரு சிறந்த தேர்வாகும். மனித பிறவில் கண்டிப்பாக மிஸ் செய்யக் கூடாத சில இயற்கை அழகிடங்களை உங்களுக்கு காட்சிப்படுத்துவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
1. புந்தி :
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள புந்தி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாதளங்களில் ஒன்றாகும். ராஜஸ்தானின் பிரகாசத்தையும், எழுச்சியையும் அவர்களின் பாரம்பரியங்களையும், கலாச்சாரத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் உணர்வுபூர்வமாக பந்தத்தையும் இங்கு பார்க்க முடியும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-31.jpg)
2. மஜுலி தீவு
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியால் சூழப்பட்ட பகுதி. வடகிழக்கு மாநிலங்களில் அசாம் ஓரளவு நல்ல முன்னேற்றம் அடைந்த மாநிலம்.ஆனாலும் இங்கு பெரும்பாலும் பழங்குடியினறே வசிக்கிறார்கள்.ஆஸ்காருக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் எடுத்த வில்லேஜ் ராக்ஸ்டார் படத்தில் இந்த தீவின் அழகை அப்படியே பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-32.jpg)
3. அப்பி நீர்வீழ்ச்சி
மடிகேரி நகரத்திலிருந்து 7-8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அப்பே நீர்வீழ்ச்சி கூர்க் பகுதியில் அதிகம் விரும்பி ரசிக்கப்படுகிற ஒரு நீர்வீழ்ச்சியாகும். அடர்த்தியான தனியார் காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் வழி செல்லும் ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி நம்மை திடுக்கிட வைக்கின்றது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-33.jpg)
4. புலிகாட் ஏரி:
பல அரிய புலம்பெயர் பறவைகள் விஜயம் செய்து வசிக்கும் பறவைகள் சரணாலயமாகவும் விளங்கும் இந்த புலிகாட் ஏரி அல்லது பழவேற்காடு ஏரி 350 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.ஒரிசாவில் உள்ள சில்கா ஏரிக்கு அடுத்தபடியாக இது இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய உப்பங்கழி ஏரியாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-34.jpg)
5. லோக்தாக் ஏரி:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/DSC02610-35.jpg)
மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள லோக்தாக் ஏரி வட-கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். உலகின் மிதக்கும் ஏரியாகவும் பமிட்கள் காரணமாக இவைகள் அடையாளம் காணப்படுகின்றன. இந்த பமிட்கள் பெரிய அளவிலான, மென்மையான, சாஸர்-வடிவிலான தண்ணீருக்கு கீழ் பகுதியிலிருந்து அமைந்துள்ள மண் மற்றும் தாவரங்கள் நிறைந்த இடமாகும்