ஒரு சரிவிகித உணவானது நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
உடல்- மன நலம், அதை நோக்கிய நல்ல வாழ்க்கையைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக, ஒரு முழுமையான குணமாக்கல் முறையாக ஆயுர்வேத மருத்துவம் கருதப்படுகிறது. அது மட்டுமா.. உங்களின் அன்றாட உணவூட்டத்தில் அருமையான பலன் தரக்கூடிய ஒரு கூறாகவும் ஆயுர்வேதம் இருக்கமுடியும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? ஆயுர்வேதச் சாப்பாட்டைப் பற்றி இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால், உடல்பயிற்சி வல்லுநர் அன்சுகா பார்வானியின் மிக அண்மைய இன்ஸ்டாகிராம் பதிவு, மதிப்புவாய்ந்த தகவலாக இருக்கும்.
இங்கே, ஒரு நிமிடம்!
அவர் சொன்னது, இதுதான். “ இங்கு இருப்பது எனக்கான அரிய நல்லுணவு.. ஆயுர்வேத முறையிலான சாப்பாடு. எனக்கு மிகவும் பிடித்தமான உணவுவகைகளில் இதுவே சிறப்பானது. எப்போதுமே என்னுடைய உணவையும் ஊட்டச்சத்துகளையும் சரிவிகிதமாக வைத்துக்கொள்வதில் அக்கறைசெலுத்துவேன். ஆறு வகை சுவைகளையும் கொண்டதாக, ஆயுர்வேத மருத்துவத்துக்கு ஒத்ததாகவும் அது இருக்கும்.”
உணவின் மூலமும் முழுமையான குணமாக்கலைத் தரக்கூடிய ஒரு வரலாற்று மருத்துவமுறையான ஆயுர்வேதத்தின் இன்றியமையாமைக்கு அழுத்தம் தருகிறார், பார்வானி. ருசி அல்லது சுவைகளை சமன்படுத்தக்கூடிய வகையில் உணவி இருப்பது முக்கியம்; அதன் மூலம் உடலானது தனக்கு பயனுள்ளதைப் பெற்றுக்கொள்ள முடியும்.
” உங்கள் உணவில் ஆறு சுவைகளும் கலந்துள்ளன; உங்களை தனிநபராக உருவாக்குவதில் பங்களிக்கிறது எனும் நம்பிக்கையானது, உங்களின் நலவாழ்வு, சமச்சீரான சத்துகளைப் பேணுவதற்கு உதவியாக இருக்கும். அத்துடன், ஒட்டுமொத்தமாக திருப்தியைத் தருவதாகவும் நலமாக இருப்பதை உணரச்செய்வதாகவும் இருக்கும்.
உணவில் சமச்சீர் என்பது என்ன?
இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகள் உள்ளன. இவை ஏன் முக்கியம்? தேசிய உயிரிநுட்பவியல் தகவல் மையத்தில் 2014-ல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், ” ஒரு பொருளின் மருந்துத் தன்மையைத் தீர்மானம்செய்வதற்கு அதன் சுவையை அறிவியல்வழியில் பயன்படுத்தமுடியும். அதன் மூலம் புதிதாக மருந்தைக் கண்டறியும் செயல்முறையில் நேரத்தையும் செலவையும் குறைக்கவும் தலையாய தேர்வுமுறையைப் பெறவும் முடியும். பாதுகாப்பானதும் திறனுள்ளதுமான மருந்துகளைக் கண்டறிவதில் கவனம்குவிக்கவும் இலக்குவைக்கவும் இது உதவும்.”
இனிப்பு
இனிப்பான உணவின் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், இது தோலுக்கும் முடிக்கும்கூட நல்லது என்கிறார்கள். எடுத்துக்காட்டு: அரிசி, கோதுமை, பாஅல், பேரீச்சை, சர்க்கரை, உருளைக்கிழங்கு, நெய் ஆகியவை.
கசப்பு
வேம்பு, கீரை மற்றும் பாகற்காய் போன்ற உணவுவகைகள் கசப்புச்சுவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் செரிமான மண்டலத்தைக் குளுமையூட்டக் கூடியவை என்றும் கல்லீரல் செயல்பாட்டைச் சரியாக்கக்கூடியவை என்றும் கருதப்படுகின்றன.
புளிப்பு
புளி, சுவையூட்டப்பட்ட தயிர், நெல்லி மற்றும் தக்காளி ஆகியவை உடம்பை வெதுவெதுப்பாக வைத்திருக்கவும் பசியின்மையைப் போக்கி செரிமானத்துக்கும் உதவுகிறது. ஆனாலும் அளவுக்கு அதிகமானால், செரிமானச் சிக்கலையும் மிகை அமிலத்தன்மையையும் உண்டாக்கும்.
கார்ப்பு
இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவை கொழுப்பைக் கரைப்பதிலும் செரிமானத்துக்கு உதவுவதிலும் திறன்வாய்ந்தவை; இதன் மூலம் சீரான இரத்த ஓட்டத்துக்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன.
உவர்ப்பு
இந்த சுவை உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்கிறது என்பது இருக்க, அளவுக்கு அதிகமாகிவிட்டால் நீர்மிகுவதற்கும் மிகை இரத்த அழுத்தத்துக்கும் வழிவகுக்கும்.
துவர்ப்பு
தேயிலை, காஃபி, அத்தி, மாதுளை, தண்ணீர்விட்டான் கொடி போன்ற உணவுவகைகள் அழற்சிக்கெதிரான தன்மையை அதிக அளவு கொண்டவை. இவற்றை குறைவாக உட்கொண்டால், செரிமானத்துக்கு உதவும்.