/tamil-ie/media/media_files/uploads/2019/11/a10-4.jpg)
best oil to fry chicken and mutton - சிக்கன், மீன் வறுவலுக்கு எந்த எண்ணெய் உகந்தது தெரியுமா?
பொதுவாக எண்ணெய்யை சூடு படுத்தும் முறையில்தான் அதன் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு எண்ணெய்யையும் சூடு படுத்தும் பதம் ஒன்று இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் smoke point என்று கூறுவார்கள். எனவே அதன் படிதான் எண்ணெய்யை சூடு படுத்த வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உதாரணமாக சிக்கன் , மட்டன் என எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டுமெனில் அதன் சூடு பதம் 176 முதல் 204 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். அதுவே அவகோடா எண்ணெயாக இருந்தால் 271 டிகிரியாக இருக்க வேண்டும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஸ்பெஷல் வீடியோ
அதே போல், தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய் 177 டிகிரி, சூரிய காந்தி எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் 232 டிகிரி,மற்றும் ஆலிவ் எண்ணெய் 160 டிகிரியாக இருக்க வேண்டும்.
இந்த குறிப்பிட்ட அளவுகளுக்குள் எண்ணெய்யின் வெப்ப அளவு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த எண்ணெய் ஆரோக்கியமானதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தும் ரீஃபைண்ட் எண்ணெய்தான் அதிக கொழுப்பை உண்டாக்கும் என்ற எண்ணத்தில் மாற்று எண்ணெய்களை சிலர் பரிந்துரைக்கின்றனர். பலரும் அதை நம்பியும் ஆரோக்கியத்தின் பயத்தால் மாற்று வழிக்கு மாறி வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே எண்ணெய்யை மாற்றினால் உடல் நலம் பெறுமா என்பது கேள்வியே.
எண்ணெய் அதிகமாகப் பயன்படுத்தினால் கொழுப்புச் சத்து அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. கொழுப்புச் சத்து அதிகரித்தால் இதய நோய் , உடல் எடை அதிகரிப்பு, இரத்த அழுத்தம், முகப்பருக்கள், என பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.