இப்படி ஒரு முறை உருளைக்கிழங்கு பட்டணி கறி, ஒருமுறை இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
3 உருளைக்கிழங்கு நறுக்கியது
1 ½ ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் சோம்பு
1 ஸ்பூன் சீரகம்
பட்டை, கிராம்பு
ஏலாக்காய் 2
2 வெங்காயம் நறுக்கியது
6 பூண்டு
3 பச்சை மிளகாய்
1 துண்டு இஞ்சி நறுக்கியது
3 தக்காள் நறுக்கியது
அரை டீஸ்பூன் உப்பு
1 கப் தயிர்
3 ஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
2 ஸ்பூன் மிளகாய் பொடி
2 ஸ்பூன் தனியாத்தூள்
2 ஸ்பூன் சீரகத்தூள்
1 கப் பட்டாணி
1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, சோம்பு, பட்டை, சீரகம், ஏலக்காய், கிராம்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து கிளரவும். தக்காளி சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து நன்றாக கிளர வேண்டும். சூடு ஆறியதும் அரைத்துகொள்ளவும். தொடர்ந்து அதே பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் பொடி, தனியாத்தூள், சீரகத்தூள், சேர்த்து கிளரவும், நன்றாக எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் அரைத்த விழுதை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். இதில் கடைந்த தயிரை சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து உருளைக்கிழங்கு, பட்டாணியை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கடைசியாக கரம் மசாலா சேர்த்து கிளரவும்.