Best Time to Drink Milk : இந்திய உணவுகளில் எப்போதும் இடம் பெறும் உணவுப் பொருட்களில் ஒன்று பால் ஆகும். சில நேரங்களில் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டு மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் குழந்தைகளுக்கு தருவது வழக்கம்.
புரதம், விட்டமின் ஏ, பி1, பி2, பி12, டி, மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு தேவையான புரதத்தை அளிப்பது இந்த உணவாகும்.
கார்போ ஹைட்ரேட், நல்ல கொழுப்பு, புரதம் போன்ற அன்றாட வாழ்விற்கு தேவையான ஆரோக்கியம் மிக்க உணவு இது. ஆயுர் வேதத்தில் மிக முக்கியமான இடத்தினையும் பெற்றுள்ளது இந்த உணவு.
ஆயுர் வேதத்தின் படி, மில்க்ஷேக் உண்பது மிகவும் தவறானது. அதே போல் மிகவும் புளிப்பான பழங்கள், வாழைப்பழம், மாம்பழம் ஆகியவற்றை பாலுடனோ, தயிருடனோ அறவே சேர்க்கக் கூடாது.
பனானா மில்க் ஷேக் மற்றும் ஃப்ரூட் ஸ்மூதிகளை முற்றிலுமாக ட் ஹவிர்ப்பது நலம். வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்த்தால் அது உடல் சூட்டினை அதிகரிக்கும். சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகளையும் உருவாக்கம்.
Best Time to Drink Milk - எந்த நேரத்தில் பால் குடிப்பது நல்லது ?
சிலர் காலையில் குடிப்பது நலம் என்பார்கள். பலர் இரவு தூங்குவதற்கு முன்பு குடித்தால் நல்லது என்பார்கள். ஆனால் இரண்டும் இல்லை. மதியத்தில் இருந்து இரவு தூங்கப் போகும் வரை எந்நேரத்திலும் குடிக்கலாம்.
5 வயதிற்கு மேற்பட்டவர்கள், காலையில் பால் குடிப்பதை தவிர்க்க கூறுகிறது ஆயுர்வேத மருத்துவம். பாலுடன், சால்ட் வகை உணவுகள் உண்பதையும் தவிர்க்கலாம்.
பரோட்டா, சாய், ப்ரட் பட்டர் ஆகியவற்றை காலை, பாலுடன் உண்பதால் செரிமானம் ஆவதற்கு மிகவும் கடினமாகிவிடும். செரோடோனின் அடங்கி இருப்பதால், இரவு தூங்கப் போகும் முன்னர் பால் அருந்துவதால் நல்ல தூக்கம் வரும்.
மேலும் படிக்க : நீண்ட அடர்த்தியான முடியைப் பெற வேண்டுமா ?