/indian-express-tamil/media/media_files/2025/09/24/download-6-2025-09-24-17-24-16.jpg)
மாதுளை என்பது சுவையோடு மட்டுமன்றி, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்த ஒரு பழம் ஆகும். மாதுளை மரத்தை வீட்டின் பின்புற தோட்டம், மொட்டை மாடி அல்லது பால்கனியிலும் வளர்த்துக்கொள்ளலாம். முதலில், உங்கள் காலநிலைக்கு ஏற்ற மாதுளை வகையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தியாவில் புகழ்பெற்ற வகைகள் பக்வா, கணேஷ் மற்றும் அரக்தா போன்றவை ஆகும், இவை சிறந்த பழ மகசூல் மற்றும் சுவைக்கு அறியப்பட்டவை. மாதுளை அதிகம் சூரிய ஒளி மற்றும் வெயிலைக் காணும் சூடான, வறண்ட பகுதிகளில் சிறப்பாக வளர்கிறது. ஆகவே, உங்கள் தோட்டத்தில் அதிக நிழல் உள்ள இடங்களை தவிர்த்து, நல்ல வடிகாலுள்ள, வெயிலான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக மழை பெய்யும் இடங்களில் நீர் நனையாமல் மேடாக மண்ணை மாற்றுவதும் அவசியம்.
மாதுளை நடவு: விதை அல்லது துண்டுகளிலிருந்து வளர்க்கலாம்; ஆனால் ஆரோக்கியமான தண்டு மூலம் வளர்த்தல் சிறந்தது. குழி வேரை விட இருமடங்கு அகலமாக தோண்டி, உரம் சேர்த்து மண்ணை வளப்படுத்தவும். மரக்கன்றுகளை குழியில் வைத்து மெதுவாக சுற்றியுள்ள மண்ணை அழுத்தி நிலைநாட்டி, நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டும். அடித்தளத்தை சுற்றி கரிமத் தழைகளை பரப்புவது ஈரப்பதத்தை பராமரிக்க உதவும். செடிகளுக்கு 5-6 அடி இடைவெளி வைக்க வேண்டும்.
நீர்ப்பாசனம்: இளம் செடிகள் வறண்ட காலங்களில் வாரத்திற்கு 1-2 முறை நன்கு நீர் ஊற்ற வேண்டும். அதே நேரத்தில் அதிகமும் நீர் ஊற்ற கூடாது; இது வேர்களை சேதப்படுத்தும். தழைக்கூளம் வைத்து மண்ணின் ஈரப்பதம் பராமரிக்கவும், செடியின் வளர்ச்சிக்கு உதவும்.
கத்தரித்தல்: குளிர்காலத்தில் இறந்த, பலவீனமான கிளைகள் மற்றும் அடிப்பகுதியிலிருந்து வளரும் கிளைகளை அகற்றி செடியை வடிவமைக்க வேண்டும். இது சூரிய ஒளி நன்கு செல்லும் வகையில் செயல் படுத்தி, பூச்சி தொற்றையும் குறைக்கும். சரியான கத்தரித்தல் செடியின் வளர்ச்சியையும் பழ உற்பத்தியையும் அதிகரிக்கும்.
பூச்சி கட்டுப்பாடு மற்றும் உரமிடல்: மாதுளை செடிகள் பல பூச்சிகளால் பாதிக்கப்படக்கூடும். வேப்பெண்ணெய் போன்ற இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி பாதுகாக்கலாம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இயற்கை உரம் அல்லது மண்புழு உரம் கொடுத்து செடியின் வளத்தை மேம்படுத்தலாம்.
அறுவடை மற்றும் பராமரிப்பு: நடவு செய்த 2-3 ஆண்டுகளில் மாதுளை பழம் பழுத்து அறுவடை செய்யத் தயாராக இருக்கும். பழங்கள் நன்கு சிவப்பாகவும், உறுதியானதாகவும் இருக்கும்போது மட்டும் அறுவடை செய்ய வேண்டும். முறையான பராமரிப்பு, சீரான நீர்ப்பாசனம் மற்றும் கத்தரித்தல் நல்ல பழங்களை தரும். வீட்டிலேயே மாதுளை வளர்ப்பதால், ரசாயனமில்லாத, சத்தான பழங்களை சாப்பிட முடியும்.
மொத்தத்தில், மாதுளை வளர்ப்பது சற்று சவாலானதாகத் தோன்றினாலும், சரியான முறைகளில் கவனம் கொடுத்தால் சுகாதாரமான, சுவையான மாதுளைகளை வீட்டிலேயே பெற முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.