பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் எண்ணெய் பிசுக்கு அழுக்குடன் இருக்கும் தோசைக் கல்லை ஈசியாக சுத்தம் செய்யலாம். அதற்கு வெறும் பத்து ரூபாய் போதும் வீட்டிலேயே அதனை சுத்தம் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
பேஸ்ட்
பேக்கிங் சோடா
சோப்புத்தூள்
டிஷ் வாஷ் லிக்யூட்
எலுமிச்சை பழம்
கல் உப்பு
செய்முறை
ஒரு சின்ன கிண்ணத்தில் பேஸ்ட் எடுத்து பேக்கிங் சோடா, சோப்புத்தூள் மற்றும் பாத்திரம் விளக்கக்கூடிய லிக்யூட், அரை எலுமிச்சை பழம் மற்றும் அதில் கல் உப்பு போட்டு நுரை வரும் வரை கலந்து எடுக்கவும். பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடேறியிருக்கும் போது அதன் மேல் கத்தியை வைத்து அழுக்குகளை கீறி எடுக்கவும்.
அடுத்ததாக தோசை கல் மீது கீறி உள்ளதை நீக்கிவிட்டு மேலே கலண்நு வைத்துள்ள பேஸ்ட் போட்டு தேய்க்கவும். இரண்டு நிமிடத்திற்கு அதை அப்படியே விட்டு விடவும்.
2 நிமிடம் கழித்து கல் மேலே அந்த எலுமிச்சை பழம் தோலை வைத்து தேய்க்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி தேய்க்க வேண்டும். ஏனென்றால் கெட்டியாகிவிடும். தண்ணீர் ஊற்றி பின்னர் இரும்பு ஸ்க்ரப்பர் வைத்து தேய்த்து விடவும். மேல்ம் அழுக்கு நீக்க கல் மீது பேக்கிங் சோடா எலுமிச்சை பழம் சாறு சேர்த்து மேலும் கரை கருப்பு நிறம் உள்ள அனைத்து பக்கங்களிலும் தேய்த்து விடவும்.
அடடே இது சூப்பர் ஐடியாவா இருக்கேனு நீங்களே யோசிப்பபீங்க kitchen tips
கருமை நிறம் எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் போகும் வரை தேய்த்து விட வேண்டும். இந்த தோசை கல்லை சுத்தம் செய்து பயன்படுத்தலாம். வாரத்திற்கு ஒருமுறை என தோசை கல்லை சுத்தம் செய்து வந்தாலே போதும் தோசைக்கல் சுத்தமாக இருக்கும்.
மீண்டும் வெறும் தோசை கல்லை சிறிது நேரம் கழித்துவிட்டு மேலே அந்த பேஸ்ட் இல்லாதவாறு நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த தோசை கல்லை சீசனிங் செய்வதற்காக அடுப்பு மேல் வைத்து மேலே விளக்கெண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் வைத்து எல்லா பக்கமும் படுமாறு தேய்த்து விடவும்.
பின்னர் அதில் ஒரு ஆம்லெட் சுட்டு அந்த பிசுபிசுப்பு தன்மையை கொண்டு வர வேண்டும். அந்த ஆம்லெட்டை தூக்கி போட்டு விட்டு மீண்டும் வெங்காயம் வைத்து அனைத்து பக்கங்களில் தேய்க்கவும்.
மேலும் ஒரு மொத்தமாக தோசை ஊற்றவும்.அதையும் சாப்பிடக்கூடாது. தூக்கிப்போட்டுவிட்டு அடுத்ததாக எப்போதும் போல தோசை சுட ஆரம்பிக்கலாம்.