Advertisment

'ஆசியாவின் மிக நீளமான பிரகாரம்; உலகளவில் மூன்றாமிடம்' - தமிழ்நாட்டில் காணத்தக்க முக்கிய இடங்கள்!

தேவிப்பட்டினம் என்பது ஒரு கடற்கரை கிராமம். இது நவபாஷாணம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமபிரான் நவக்கிரகங்களை இங்கு வழிபாடு செய்ததாக நம்பப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
best tourists places in tamil nadu ramanathapuram - 'ஆசியாவின் மிக நீளமான பிரகாரம்; உலகளவில் மூன்றாமிடம்' - தமிழ்நாட்டில் காணத்தக்க முக்கிய இடங்கள்!

best tourists places in tamil nadu ramanathapuram - 'ஆசியாவின் மிக நீளமான பிரகாரம்; உலகளவில் மூன்றாமிடம்' - தமிழ்நாட்டில் காணத்தக்க முக்கிய இடங்கள்!

இராமநாதபுரம் தமிழ்நாட்டின் பழமையான பகுதிகளில் ஒன்றாகும்.

Advertisment

இராமேஸ்வரத்தில் இராமநாத சுவாமி திருக்கோவில், அக்னி தீர்த்தம், பாம்பன் பாலம், தனுஸ்கோடி, முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம், தேவிப்பட்டினம் (நவபாஷாணம்), திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை மற்றும் ஏர்வாடி தர்கா ஆகிய சில முக்கிய சுற்றுலாத் தளங்கள் உள்ளன.

இராமநாத சுவாமி திருக்கோவில்

இராமநாதசுவாமி கோவில், இக்கோவில் அற்புதமான அமைப்பு, நீண்ட தாழ்வாரங்கள், கலையுணர்வுடன் செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் உயர்ந்த 38 மீட்டர் கோபுரம் கொண்டது.

இதன் கட்டிடப்பணி 12 ஆம் நூற்றாண்டில் சேதுபதி மறவரால் தொடங்கப்பட்டு பிரசித்தி பெற்ற மூன்றாவது பிரகாரமானது அவரது வாரிசுகளால் முடிக்கப்பட்டது.

ஆசியாவின் மிக நீளமான பிரகாரமும், உலகின் மூன்றாவது பெரியதுமான இது, கிழக்கில் இருந்து மேற்காக 197 மீட்டரும் மற்றும் வடக்கு தெற்காக 133 மீட்டரும் கொண்டது.

இந்தியாவிலுள்ள 12 ஜோதி லிங்க வழிபாட்டுத் தலங்களுள் முக்கியமானதாகும்.

இராமபிரான் ஒரு குறிப்பிட்ட மங்களகரமான நேரத்திற்குள் சிவ வழிபாடு செய்ய ஒரு லிங்கத்தைக் கொண்டு வருமாறு அனுமனை அனுப்பினார். அனுமன் வர நேரமானதால் சீதை ஒரு லிங்கத்தை உருவாக்கி இராமபிரான் வழிபட ஏற்பாடு செய்தார். இந்த லிங்கம் தான் இராமநாத சுவாமி என்று கோவிலில் வழிபாடு செய்யக்கூடிய முக்கிய தெய்வம் ஆகும். பின் அனுமனை சமாதானம் செய்ய அவர் கொண்டு வந்த லிங்கமும் வட திசையில் அமைக்கப்பட்டது.

இராமநாதசுவாமி கோவில் கோபுரத்திற்கு முன்னால் சுமார் 100 மீ. தொலைவில் உள்ள அமைதியான ஆழமற்ற கடல் பகுதி அக்னி தீர்த்தம். மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது.

பாம்பன் பாலம்

இந்தியாவில் மிகப் பெரிய பாலமான 2.2 கி.மீ.நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய பெருநிலப்- பகுதியுடன் இணைக்கிறது. இது பாம்பன் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கப்பல் செல்ல திறந்து மூடும் அமைப்பிற்காக புகழ் பெற்றது.

தனுஸ்கோடி

இது இராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனை தனுஷ்கோடி என அழைக்கப்படுகிறது.

தனுஷ்கோடியில் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் கோதண்டராமசுவாமி கோவில் தவிர முற்றிலும் அழிவிற்குள்ளானது. இக்கோவில் இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது.

சாலை வழியாக இக்கோவிலை அடையலாம். இராவணனின் சகோதரனான விபீஷணன் இங்கு இராமபிரானிடம் சரணடைந்ததாக நம்பப்படுகிறது.

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்

இந்தியத்திருநாட்டின் 11 வது குடியரசுத்தலைவராக விளங்கிய விஞ்ஞானி ஆ. ப. ஜெஅப்துல் கலாம் அவர்களின் மணி மண்டபம் இங்குதான் உள்ளது.

விஞ்ஞானியான இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.

அவர் கடந்த 2015 ஆண்டு காலமானார். பின் ஜூலை மாதம் 30ஆம் திகதி பேய்க்கரும்பில் நல்லடக்கம் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில், அன்னாரது நினைவாக ஒரு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

தேவிப்பட்டினம் (நவபாஷாணம்)

தேவிப்பட்டினம் என்பது ஒரு கடற்கரை கிராமம். இது நவபாஷாணம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமபிரான் நவக்கிரகங்களை இங்கு வழிபாடு செய்ததாக நம்பப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவிக்கு ஒரு கோவிலும் அருகில் உள்ளது. இந்துக்கள் முன்னோர்களுக்கான சடங்குகளை இங்கு செய்கிறார்கள்.

திருப்புல்லாணி

திருப்புல்லாணியில் விஷ்ணுவின் கோவிலான ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோவில் உள்ளது. இராமபிரான், இலங்கைக்கு செல்ல உதவிட வேண்டி சமுத்திர இராஜனை வணங்கி தர்ப்பை புல்லின் மீதமர்ந்து தவம் செய்ததனால் இவ்வூர் தர்ப்பசயனம் என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

திருஉத்திரகோசமங்கை

திருஉத்திரகோசமங்கை, இராமநாதபுரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப்பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள மரகதத்தாலான நடராஜர் சிலை உள்ளது.

ஏர்வாடி

சுல்தான் இப்ராகிம் சையது அவுலியாவின் கல்லறை இங்கு உள்ளது.

இவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவிலிருந்து கண்ணனூர் வழியாக இந்தியா வந்ததாக கூறப்படுகின்றது. இங்கு பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Tamil Nadu Ramanathapuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment