கிச்சன் ஹேக்ஸ்: தக்காளி, கோவைக்காய் மற்றும் கீரையை வெட்ட சிறந்த வழி இதோ!

பயன்படுத்துவதற்குமுன் காய்கறிகளை நன்கு கழுவி, உலர்த்தப்படுவதை உறுதி செய்யவும்.

tomato
Best way to cutting vegetables without loss of nutrients

காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே அவற்றை வெட்டும்போதும், சமைக்கும்போதும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெரும்பாலான பகுதிகளை, சுவையை அதிகரிக்க உணவுகளில் சேர்க்கலாம்.

பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்ராண்ட்களில் உண்மையில் கேரட், ப்ரோக்கோலி தண்டுகள் மற்றும் சைனீஸ் முட்டைக்கோஸ் ஆகியவற்றின் முனைகளை ஸ்டாக் செய்து, அவற்றை, உணவுகளில் பயன்படுத்துகின்றனர். அதனால்தான் காய்கறிகளை சரியாக நறுக்கி அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:

* பயன்படுத்துவதற்கு முன், காய்கறிகளை கழுவி உலர்த்த வேண்டும்.

* கூர்மையான கத்தியைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* காய்கறிகளுக்கு என தனியாக நறுக்கும் பலகை இருக்க வேண்டும்.

* வலுவான வாசனை கொண்டு, காய்கறிகளை தேர்ந்தெடுக்கவும்.

காய்கறிகளை வெட்டும்போது குறைந்த வேஸ்ட் மற்றும் அதிக பயன்பாட்டை உறுதி செய்வதற்கான சில வழிகள் கீழே உள்ளன:

காய்கறிகளை வெட்டும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்!

குடைமிளகாய்

மிளகாயை 180 டிகிரி நிலையில் வைத்து, அதன் கீழ் மற்றும் மேல் பகுதிகளை வெட்டி, தனி கிண்ணத்தில் வைக்கவும். மேல் பகுதியில் ஒரு துளை விட்டு, ஒரு விரலால் மேல் காம்பை அகற்றலாம். இப்போது மிளகாயை செங்குத்தாக நறுக்கி, விதைகளை எடுக்கவும். பிறகு அதனை நீளவாக்கில் அல்லது பொடித்துண்டுகளாக நறுக்கி, வசதிக்கேற்ப பயன்படுத்தவும்.

எப்போதும் குடை மிளகாயை நறுக்கும்போது, அதன் தோல் வெட்டும்பலகையில் ஓட்டும்படி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றபடி கத்தி கூர்மையாக இருந்தாலும் தண்ணீர் இழப்பு ஏற்படும் என்று சமையல் கலைஞர் அர்ஜுன் சத்தா கூறுகிறார்.

தக்காளி

குடை மிளகாய் போலவே, தக்காளியையும் வெட்ட வேண்டும். ஆனால் தக்காளியின் கண்ணை, கூர்மையான கத்தியின் நுனியால் அகற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விதை நீக்கப்பட்ட தக்காளி கான்டினென்டல் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் அதன் கூழ் ப்யூரிட் மற்றும் பல கறிகளில் சேர்க்கப்படுகிறது.

கோவைக்காய்

கோவைக்காய்’ வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் இதை பல வழிகளில் நறுக்கலாம். காய்கறியின் தலை மற்றும் வால் பகுதிகளை நீக்கிய பிறகு, அவற்றை 3 செமீ அளவில் உருளை வடிவில் வெட்டி, க்யூப்ஸ் அல்லது ஜூலியன் போன்ற துண்டுகளாக்கி பாஸ்தா மற்றும் சாலட்களில் சேர்க்கலாம்.

நீங்கள் கோவைக்காயை ஒரு பீலரைப் பயன்படுத்தி நறுக்கி, ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெயில் போட்டு வதக்கலாம். பிறகு சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம். விதைகளை அப்புறப்படுத்தக் கூடாது என்பதால், அதிக பயன் தரும் காய்கறியாக இது கருதப்படுகிறது.

கீரை

கீரையை குறைந்தது 3-4 முறை தண்ணீரில் நன்றாகக் கழுவுவது அவசியம். அவற்றை நன்றாக உலர்த்திய பிறகு, தண்டுகளை நறுக்கி ஒதுக்கி வைக்கவும். அதிகபட்ச பயன்பாட்டுக்கு, அவற்றை கீரையுடன் சேர்த்து பயன்படுத்தலாம். கீரையை வேகவைக்கும்போது, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்தால் பச்சைத் தன்மை அப்படியே இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Best way to cutting vegetables without loss of nutrients

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com