/indian-express-tamil/media/media_files/2025/10/02/download-80-2025-10-02-14-16-33.jpg)
உருளைக்கிழங்கு என்பது உலகளவில் மட்டுமல்லாமல், தமிழர்கள் அன்றாடம் உணவில் அடிக்கடி பயன்படுத்தும் மிக முக்கியமான ஒரு உணவுப் பொருளாகும். சமைக்க எளிதாகவும், எந்த உணவிலும் சுவையை அதிகரிக்கும் தன்மையுடன் இருப்பதாலும், இது பெரும்பாலானவர்களின் பிடித்த கிழங்கு வகையாகும். ஆனால் பலர் இதை வெறும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த, எடையை அதிகரிக்க வைக்கும் பொருளாகவே நினைத்து தவறாக மதிப்பீடு செய்கிறார்கள். உண்மையில், உருளைக்கிழங்கில் பலவிதமான சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், அதில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
உருளைக்கிழங்கில் முக்கியமாக கார்போஹைட்ரேட்கள் நிறைந்துள்ளதால், இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இது எளிதாக ஜீரணமாகும் சாம்பிள கார்போஹைட்ரேட் என்பதால், உடலில் விரைவில் சக்தியாக மாறுகிறது. இவ்வகையான ஆற்றல் உணவு, குழந்தைகள், மாணவர்கள் மற்றும் உடல் உழைக்கும் மக்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது.
மேலும், உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் பி 6 போன்ற முக்கியமான வைட்டமின்கள் உள்ளன. வைட்டமின் சி உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது சரும நலத்தையும் பாதுகாக்கும். வைட்டமின் பி 6 மூளை நலத்திற்கு, நரம்பியல் செயல்பாடுகளுக்குத் தேவையானது. இதில் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் கூறுகள் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுக்கும்.
உருளைக்கிழங்கில் போட்டாசியம் என்ற தாது அதிக அளவில் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, இருதய நலத்தை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஆராய்ச்சிகளும், உருளைக்கிழங்கு இருதயநோய் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற தீவிர நோய்கள் தாக்கம் குறைவதற்கு உதவுகிறது எனக் கூறுகின்றன.
அதேசமயம், உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது மலச்சிக்கலைத் தவிர்க்க, குடல் நலத்தை மேம்படுத்த, ஜீரண சக்தியை உயர்த்த உதவுகிறது. நார்ச்சத்து உள்ள உணவுகள் இருதய நோய் அபாயத்தையும் குறைக்கக்கூடும் என்பதையும் மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
உருளையை காப்பாற்றும் பூண்டு!
இவ்வளவு சத்துள்ள உருளைக்கிழங்கை நம் வீடுகளில் வெங்காயத்துடன் சேர்த்து சேமித்து வைப்போம். அனால் அப்படி வைக்கும் போது உருளை கிழங்கு அனைத்தும் முளைத்துவிடும். அதை தடுப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கு ஒரு சூப்பர் ஐடியா உள்ளது.
நீங்கள் பூண்டு உருக்கும் போது அதன் காம்பை தூக்கி எரியாமல் அதை தூக்கி அந்த உருளையை வைத்திருக்கும் இடத்தில போடவும். இது அந்த உருளைகளை முளைக்காமல் வைத்திருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.