/tamil-ie/media/media_files/uploads/2022/01/kitchen-navratri_759.jpg)
Best ways to keep your kitchen disinfected
கொரோனா வைரஸ் தொற்றுநோய்' உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை முன்னணியில் கொண்டு வந்துள்ளது. இந்த நாட்களில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பழக்கங்களை பராமரிப்பது மிகவும் முக்கியமானது.
இதனால், விளைபொருட்களின் தரத்தில் சமரசம் செய்யாமல், நம்பகமான ஆதாரங்களில் இருந்து, தங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இருப்பினும், சமையலறை இடங்களும் தொற்றுநோய்க்கான ஆதாரமாக உள்ளன.
உணவு மாசுபடுவதைத் தடுக்க வீட்டிலுள்ள மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்து சுத்தமாக வைத்திருப்பது முக்கியமானது.
இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கொரோனா தொற்றுநோய்களின் போது, உங்கள் சமையலறை மேற்பரப்புகள் மற்றும் பகுதியை சுத்தமாகவும், கிருமிநாசினியாகவும் வைத்திருக்க சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சமையலறை பகுதிகளை கிருமி நீக்கம் செய்து சுத்தமாக வைத்திருக்க 3 குறிப்புகள் இங்கே:
* சமையலறை கவுண்டர்கள் மற்றும் ஸ்லாப்களில் நாம் அனைத்து உணவுகளையும் தயார் செய்து வைக்கிறோம். இதில் காலப்போக்கில் தூசி அல்லது அழுக்கு சேரக்கூடும். அதனால்தான் FSSAI இன் படி தினமும் ஒரு முறையாவது தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சமையலறை கவுண்டர்கள்/ஸ்லாப்கள் மற்றும் அடுப்பை நன்கு கழுவுவது முக்கியம்.
* சாப்பாடு தயாரித்தவுடன், சமையல் அறையை மட்டுமல்ல, ஒவ்வொரு உணவையும் தயாரித்த பிறகு கேஸ் அடுப்பையும் சுத்தம் செய்வது நல்லது. இது கிருமிகள் அல்லது நோய்த்தொற்றுகள் பரவும் அபாயத்தைக் குறைத்து, எல்லா நேரங்களிலும் நல்ல தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க உதவும்.
* மற்றொரு முக்கியமான அம்சம் நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்ய FSSAI பரிந்துரைக்கிறது.
இந்த உதவிக்குறிப்புகள் நீண்ட காலத்திற்கு உதவிகரமாக இருக்கும் மற்றும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் போதுமான உணவுப் பாதுகாப்பைப் பராமரிக்கவும் உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.