/indian-express-tamil/media/media_files/2025/09/16/download-28-2025-09-16-08-50-35.jpg)
டீ வடிகட்டியை தினமும் பயன்படுத்துவதால், அதில் கறைகள் மற்றும் அழுக்குகள் எளிதாக படிந்து விடுகின்றன. ஃபில்டரின் ஓட்டைகள் அடைந்து கருப்பு படலம் தோன்றும்போது, அதை சுத்தம் செய்வது மிகவும் அவசியம், இல்லையெனில் காலப்போக்கில் தேநீரின் சுவையை இது பாதிக்கக்கூடும். ஒரே மாதிரி பல முறை தேய்த்தாலும், அது முழுமையாக சுத்தமாகாது. குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், வடிகட்டி பழுது போய் கிழிந்து விடும் அபாயமும் உள்ளது. ஆனால் இனி அந்த கவலையெல்லாம் வேண்டாம்! சில எளிய வீட்டு வைத்திய முறைகளால் உங்கள் டீ வடிகட்டியை புதியதுபோல் பளபளப்பாக்கலாம். இங்கே டீ வடிகட்டியை சுத்தம் செய்ய சில எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/16/istockphoto-172437143-612x612-2025-09-16-08-47-57.jpg)
சமையல் சோடா எலுமிச்சை
ஒரு கிண்ணத்தில் ஓரளவு வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவும், சில துளிகள் எலுமிச்சை சாறும் சேர்க்கவும். அந்த கலவையில் வடிகட்டியை சில நிமிடங்கள் ஊறவைத்து விடுங்கள். இது மெதுவாகவே கருப்பு படலங்களை அகற்றி, வடிகட்டிய சுத்தமாக மாற்றும். கறைகள் மிகவும் பழையதாக இருந்தால், இதையே சில நேரம் கொதிக்கவைத்து, பின்னர் பல் துலக்கும் பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யலாம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/01/28/FqqvigzuVJSu3Y2u4Wf9.jpg)
வினிகர்
வினிகர் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. ஒரு கிண்ணம் வெதுவெதுப்பான நீரில் 1-2 டீஸ்பூன் வினிகரை கலந்து, அதில் வடிகட்டியை சில நேரம் ஊற வைக்கவும். வினிகரின் தீவிரமான அமிலத்தன்மை மூலமாக கறைகள் நன்கு தளர்வதற்கான வாய்ப்பு அதிகம். அதன் பின்னர், ஒரு பழைய பல் துலக்கும் பிரஷ் அல்லது சுத்தம் செய்யும் பிரஷ் கொண்டு மெதுவாக தேய்த்து அகற்றலாம். இதனால் பிடிவாதமான கறைகளும் நீங்கி, ஃபில்டர் சுத்தமாக மாறும்.
உப்புடன் பாத்திரம் கழுவும் திரவம்
நீங்கள் பாத்திரம் கழுவும் திரவத்துடன் சிறிது உப்பையும் சேர்த்து பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் கழுவும் திரவத்தில் உப்பை கலந்து, அந்த கலவையை வடிகட்டியில் பூசி வைக்கவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து, ஒரு ஸ்பாஞ் வைத்து தேய்க்கவும். இதில் உப்பு ஒரு ஸ்க்ரப்பிங் பொருளாக செயல்பட்டு, சிக்கி கொண்டிருக்கும் அழுக்குகளைச் சுலபமாக அகற்ற உதவும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/02/15/7bItrmVl6cbblEqdV7C6.jpg)
பற்பசை
உங்களிடம் பற்பசை இருந்தால், அதை பயன்படுத்தி வடிகட்டியை சுத்தம் செய்யலாம். பற்பசையை வடிகட்டியில் பூசி, ஒரு பிரெஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்தால் லேசான கறைகளும் துர்நாற்றமும் நீங்கிவிடும். அதற்குப் பிறகு வடிகட்டியை நன்றாக கழுவி, உலர வைக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us