செலவே இல்லாமல் கரப்பான் பூச்சியை விரட்டலாம்... இந்த டிரிக்ஸ் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க!

உணவுப் பொருட்கள் மீது ஏறி, அவற்றை மாசுபடுத்தும். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற சுகாதார சிக்கல்கள் ஏற்படலாம். அதை எப்படி சுத்தமாக வைத்திருக்கலாம் என்பதை பற்றி ஒரு எளிய டிப் பார்க்கலாம்.

உணவுப் பொருட்கள் மீது ஏறி, அவற்றை மாசுபடுத்தும். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற சுகாதார சிக்கல்கள் ஏற்படலாம். அதை எப்படி சுத்தமாக வைத்திருக்கலாம் என்பதை பற்றி ஒரு எளிய டிப் பார்க்கலாம்.

author-image
Mona Pachake
New Update
download (90)

வீட்டில் கரப்பான் பூச்சிகள் பொதுவாக காணப்படும் ஒரு கடுமையான தொல்லை ஆகும். இவை இரவில் செயல்படும், சின்ன துளைகள் மற்றும் ஈரமான இடங்களில் வாழும் பூச்சிகளாகும். மிக விரைவாக பெருகும் திறனுடைய இவை, சுத்தமற்ற இடங்களில் சுற்றுவதால் பாக்டீரியா மற்றும் நோய்களை பரப்பும் அபாயம் உண்டு. உணவுப் பொருட்கள் மீது ஏறி, அவற்றை மாசுபடுத்தும். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற சுகாதார சிக்கல்கள் ஏற்படலாம். மேலும், இவற்றின் கழிவுகள் வீட்டு சுத்தத்தையும், வாசனை வாயிலாக மனச்சோர்வையும் ஏற்படுத்தக்கூடும்.

Advertisment

istockphoto-520548808-612x612

வீட்டு சுத்தம் முக்கியம்: உணவுப் பொருட்களை திறந்தவையாக வைக்காமல், எப்போதும் மூடிய டப்பாக்களில் வைத்தல் முக்கியம். சமையலறையை தினமும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகள் தேங்காமல், தினமும் வெளியே எடுத்துச் செல்ல வேண்டும்.

ஈரப்பதத்தை தவிர்த்து விடுங்கள்: கரப்பான்கள் ஈரப்பதமுள்ள இடங்களை விரும்பும். எனவே கழிப்பறை மற்றும் கிச்சனில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். லிகேஜ்கள், குழாய்களில் உள்ள சிராயசிகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும்.

இயற்கை முறைகள்: கரப்பான்களை விரட்ட இஞ்சி, பூண்டு, லவங்கம், மிளகு போன்றவற்றை பிசைந்து அதன் வாசனையை பயன்படுத்தலாம். சிலர் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை கலவையை வைத்தும் இவற்றை கட்டுப்படுத்துகிறார்கள்.

Advertisment
Advertisements

பூச்சி நாசினி உபயோகித்தல்: வீடுகளில் கடுமையான கரப்பான் தொல்லை இருந்தால், மார்க்கெட்டில் கிடைக்கும் பூச்சி நாசினிகளை பயன்படுத்தலாம். ஸ்ப்ரே, ஜெல், டிராப் போன்ற பல வகைகளில் இவை உள்ளன. மிகவும் கடுமையான சூழ்நிலைகளில், தொழில்முறை பூச்சி ஒழிப்பு சேவைகளை அழைத்துப் பயன்பெறலாம்.

ஒரு எளிய டிப்!

முதலில் இரண்டு பச்சன் உருண்டை எடுத்து அதை நன்கு தட்டி கொள்ள வேண்டும். இப்போது அதை ஒரு பவுலில் போட்டு அது கூட கொஞ்சம் டெட்டோல் மற்றும் காமபோர்ட் சேர்த்து, அதனுடன் நிறைய தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு தூங்க போகும் முன் இதை சிங்க் ஓட்டையில் ஊற்றி விட வேண்டும். இது கரப்பான் பூச்சி வருவதை தடுக்கும். 

istockphoto-1955770909-612x612

கரப்பான் பூச்சி தொல்லை தவிர்க்க, நம்முடைய வீடுகளின் சுத்தம், அமைப்பு மற்றும் பாராமரிப்பு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு சிறிய கவனக்குறைவினால் கூட, இவை விரைவாக பெருகும் அபாயம் உள்ளது. எனவே, தினசரி சுத்தம், உணவுப் பொருட்களின் பாதுகாப்பு, மற்றும் முறையான பராமரிப்புகள் மூலம் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். சுகாதாரமான வாழ்க்கைக்கு இது மிகவும் அவசியம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: