scorecardresearch

ப்ரெஷ் பீன்ஸ், உறைந்த பீன்ஸ்.. எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

பீன்ஸ் மற்றும் உறைய வைக்கப்பட்ட பீன்ஸ் குறித்தும் அதிலுள்ள ஊட்டச் சத்து குறித்தும் மருத்துவர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

Between fresh and frozen vegetables you should pick
உறைய வைப்பது ஊட்டச்சத்துக்களை பாதுகாக்கவும், கெட்டுப்போவதை தடுக்கவும் உதவும்.

மசாலா லேப்ஸ்: தி சயின்ஸ் ஆஃப் இந்தியன் குக்கிங்கின் ஆசிரியரான க்ரிஷ் அசோக் காய்கறிகள் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் பீன்ஸ் மற்றும் உறைய வைக்கப்பட்ட பீன்ஸ் குறித்தும் அதிலுள்ள ஊட்டச் சத்து குறித்தும் கூறியுள்ளார். பலரும் நினைப்பதுபோல், உறைய வைக்கப்பட்டுள்ள பீன்ஸ் ஊட்டச்சத்து குறைவானது அல்ல.

இது தொடர்பாக தெலங்கானா பஞ்சாரா கில்ஸ் பகுதியை சேர்ந்த மருத்துவர் சுஷ்மா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “ன்ஸ் ஒரு சில நாட்களுக்குள் பறிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதே நேரத்தில், உறைந்த பீன்ஸ் அறுவடை செய்யப்பட்டு உறைய வைக்கப்படும்.
அப்போது, சேமிப்பு நேரம் மற்றும் வெப்பநிலை போன்ற காரணிகளால் ஊட்டச்சத்து உள்ளடக்கம் பாதிக்கப்படலாம். மேலும், உறைய வைப்பது ஊட்டச்சத்துக்களை பாதுகாக்கவும், கெட்டுப்போவதை தடுக்கவும் உதவும்”. என்றார்.

இதுமட்டுமின்றி, பல சந்தர்ப்பங்களில், உறைந்த காய்கறிகள் புதியதை விட ஆரோக்கியமான விருப்பமாக இருக்கும் என்பதையும் மருத்துவர் சுஷ்மா ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து, பீன்ஸ்களில் உடனடியாக பறித்து விற்கப்படும் போல், முறையாக உறைய வைக்கப்பட்டு விற்கப்படும் பீன்ஸ்களிலும் சிறந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Between fresh and frozen vegetables you should pick