Bharathi Kannama Kanmani Manoharan Beauty Skincare Tips Tamil : தன் வசீகர புன்னகையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கண்மணி மனோகரன். பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் மக்களின் ஃபேவரைட் பட்டியலில் இடம் பிடித்தவர், சமீபத்தில் தன்னுடைய ஸ்கின்கேர் சீக்ரெட்டுகளை பகிர்ந்துள்ளார்.

“நம் சருமத்திற்கு வைட்டமின் C மிகவும் அவசியம். ஃபேஸ்வாஷ், மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் என எந்த வகையான சரும பராமரிப்பு பொருள்களாக இருந்தாலும் அதில் வைட்டமின் C இருக்கும்படியாக வாங்குவது சிறந்தது. அதேபோல வெளியே செல்லும்போது மறக்காமல் சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவது நல்லது.

வெய்யிலில் வெளியே சென்று வீடு திரும்பியதும், 10 நிமிடங்கள் கழித்து, வெறும் தயிரை முகத்தில் அப்லை செய்து, சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவலாம். டோனர், மாய்ஸ்ச்சரைசர் உள்ளிட்டவை உங்கள் சருமத்திற்கு ஏற்றது என்பதை ஆராய்ந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவற்றை வாங்கி எ ந்தப் பயனும் இல்லை.

தலைமுடி நீண்டு, கருப்பாக வளரவேண்டும் என்றால், தேங்காய்ப்பால் எடுத்து, அதனை முடியின் அடிவரை செல்லும்படி நன்கு தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். இது நிச்சயம் உங்கள் கூந்தலை வலுவாக்கும். கூந்தல் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதேபோல நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். உடலுக்கு மிகவும் நல்லது என்று அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. டயட் என்கிற பெயரில் சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. எது சாப்பிட்டாலும் அளவாக சாப்பிட்டால் எந்தப் பிரச்சனையும் இருக்காது”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil