Bharathi Kannama Kanmani Manoharan Beauty Tips Tamil News
Bharathi Kannama Kanmani Manoharan Beauty Tips Tamil News : பாரதி கண்ணம்மா தொடர் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கண்மணி மனோகரன். ஸ்வீட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் சமீபத்தில் தன்னுடைய சரும பராமரிப்பு வழிமுறைகளைப் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"நம் சருமத்திற்கு வைட்டமின் C மிகவும் முக்கியம். அதனால், சரும பராமரிப்பு பொருள்களில் பெரும்பாலும் வைட்டமின் C கன்டென்ட்டுகள் அதிகம் இருக்கும் பொருள்களையே பார்த்து வாங்குங்கள். அதிலும் காலையில் உபயோகிக்கும் எந்தவிதமான பொருள்களிலும் இந்த கன்டென்ட் இருப்பது அவசியம். நான் பயன்படுத்தும் க்ரீம், சீரமில் நிச்சயம் வைட்டமின் C இருக்கும். அதேபோல வெளியே செல்லும்போது, மறக்காமல் சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துங்கள்.
Advertisment
Advertisements
இரவு நேரங்களில், தேங்காய் எண்ணெய் வைத்து மேக்-அப்பை முழுவதும் அகற்றிவிட்ட பிறகு, டோனர், மாய்ஸ்ச்சரைசர் ஆகியவற்றை அப்ளை செய்வேன். என்னுடைய சருமத்திற்கு நிச்சயம் டோனர் பயன்படுத்தி ஆகவேண்டும். ஆனால், எண்ணெய் சருமமாக இருந்தால் அவர்களுக்கு அது செட் ஆகாது. எனவே, உங்கள் சருமத்தின் வகையைக் கண்டறிந்து உங்களுடைய சருமத்திற்கு எது சிறந்தது என்பதையும் கண்டறிய வேண்டியது அவசியம்.
அதிகப்படியான வெய்யிலில் வெளியே சென்று வருபவர்களின் சருமம் டேனாக போவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலிருந்து விடுபட, வீட்டில் இருக்கும் ஒரேயொரு பொருள் போதும். அதுதான் தயிர். வெளியே சென்று வந்ததுமே, சிறிதளவு தயிர் எடுத்து முகத்தில் அப்ளை செய்து, கொஞ்சம் மசாஜ் செய்து முகத்தைக் கழுவினால், இன்ஸ்டன்ட் பளீச் முகம் கியாரண்டி.
அதேபோல, ஆரோக்கியமான தலைமுடிக்கு வெங்காய சாறு மிகவும் நல்லது. நான் எப்போதும், தேங்காய்ப்பால் எடுத்து, அதனைத் தலைக்கு அப்ளை செய்து ஊறவிட்டு அலசுவேன். இது நிச்சயம் மாற்றத்தைக் கொடுக்கும். மேலும், நாம் உட்கொள்ளும் உணவும் ஆரோக்கியமான சருமத்திற்கு முக்கியம். உடலைக் குறைக்கவேண்டும் என்பதற்காக டயட் பின்பற்றுகிறார்கள். ஆனால், நான் அப்படியல்ல. அதிகமாகவும் சாப்பிடமாட்டேன், குறைவாகவும் சாப்பிட மாட்டேன். அளவோடு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவேன்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil