வெண்பாவின் நீண்ட கூந்தலின் ரகசியம் இதுதான் – ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனா பியூட்டி டிப்ஸ்

Bharathi Kannama Venba Farina Azad Beauty Skincare இந்த ஜூஸ் குடித்து வந்தால் நிச்சயம் நீண்ட இருண்ட கூந்தலுக்கு சொந்தக்காரராக மாறுவீர்கள்.

Bharathi Kannama Venba Farina Azad Beauty Skincare Secrets Tamil News
Bharathi Kannama Venba Farina Azad Beauty Skincare Secrets Tamil News

Bharathi Kannama Farina Azad Beauty Skincare Secrets Tamil News : தொகுப்பாளினியாகத் தொடங்கி தற்போது ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் வெண்பாவாக மிரட்டிக்கொண்டிருக்கும் ஃபரீனாவின் நீண்ட கூந்தல் ரகசியம் மற்றும் பளபளப்பான சருமத்திற்கான டிப்ஸ்களை பகிர்ந்துகொள்கிறார்.

“முடி வளர்வதற்கு நான் செய்கிற முதல் விஷயம் கறிவேப்பிலை ஜூஸ். வாரத்திற்கு இரண்டு முறை கறிவேப்பிலையை நன்கு அரைத்து, அதிலிருந்து ஜூஸ் எடுத்து, சர்க்கரை போன்றவற்றை எதுவும் சேர்க்காமல் அப்படியே குடித்தால், நிச்சயம் வயிறும் சுத்தமாகும். அதேபோன்று முடி வளர்ச்சியும் இருக்கும். சுவை ஒரு மாதிரிதான் இருக்கும். ஆனால், அதையெல்லாம் கண்டிக்கக்கூடாது. இந்த ஜூஸ் குடித்து வந்தால் நிச்சயம் நீண்ட இருண்ட கூந்தலுக்கு சொந்தக்காரராக மாறுவீர்கள்.

இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் தலைக்கு சரியாக எண்ணெய் தேய்ப்பதில்லை. வாரத்திற்கு ஒரு முறை என்றாலும், வேரில் நன்கு படிந்து மசாஜ் செய்து குளிக்கவேண்டும். அதேபோல தேங்காய் எண்ணெய் மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்றில்லை. விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், ஆல்மண்ட் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு விதமான எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.

பளபளப்பான சருமத்திற்கு, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 3 ஃப்ரெஷ் ஜூஸ் எடுத்துக்கொள்வது அவசியம். ஆனால், அந்த ஜூஸ்களில் சர்க்கரை எதுவும் இல்லாமல் இருப்பது நல்லது. 2 ஜூஸ் 1 இளநீர் என்றும் உட்கொள்ளலாம். இது நிச்சயம் சருமத்தை ஃப்ரெஷாக வைத்துக்கொள்ள உதவும். தினம் ஏதாவது ஒரு முழு பழத்தை உட்கொள்வதும் சிறந்தது. சரியான அளவில் தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

எவ்வளவுதான் மேக்-அப் பொருள்கள் இருந்தாலும், இதுபோன்று உணவுகள்தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உணவுகளில் அதிக கவனம் தேவை”

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannama venba farina azad beauty skincare secrets tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com