scorecardresearch

தலைமுடி உதிர்வுக்கு ‘நல்லெண்ணெய் வாழைப்பழ’ பேக் ட்ரை பண்ணுங்களேன் – பாரதி கண்ணம்மா ரூபா பியூட்டி டிப்ஸ்!

Bharathi Kannamma Actress Rupa Sree Beauty Skincare Tips எனக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதனால், கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான டயட்டை தான் பின்பற்றுகிறேன்.

தலைமுடி உதிர்வுக்கு ‘நல்லெண்ணெய் வாழைப்பழ’ பேக் ட்ரை பண்ணுங்களேன் – பாரதி கண்ணம்மா ரூபா பியூட்டி டிப்ஸ்!
Bharathi Kannamma Actress Rupa Sree Beauty Skincare Tips Tamil News

Bharathi Kannamma Actress Rupa Sree Beauty Skincare Tips Tamil News : வில்லி, குணச்சித்திர வேடம் என எந்த வகையான கதாபாத்திரம் என்றாலும் மிகவும் நேர்த்தியாக நடித்து, பல ரசிகர்களை தன் வசமாக்கியவர் ரூபா ஸ்ரீ. தற்போது டிஆர்பி-ல் தூள் கிளப்பிக்கொண்டிருக்கும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில், சௌந்தர்யா தேவியாக அனைவர்க்கும் விருப்பமான மாமியாராகக் கலக்கிக்கொண்டிருக்கிறார். சுமார் 30 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர், தன் சரும பராமரிப்பைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

“முக அழகைவிட அகத்தின் அழகு முக்கியம் என்று நினைப்பவள் நான். அதனால், வெளியில் செல்லும்போது அந்த அளவிற்கு ஒப்பனைகள் செய்துகொள்ள மாட்டேன். மாய்ஸ்ச்சரைசர், லிப் பாம் மற்றும் சின்ன பொட்டு. இதுதான் வெளியே செல்லும்போது என்னுடைய மேக்-அப் என்றே சொல்லலாம். ஆனால், என்னுடைய துறைக்காக சில சரும பராமரிப்பு வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன்.

முகப்பொலிவுக்குப் பாலேடு போதும். அதனை தினமும்கூட முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்துவிட்டுக் கழுவலாம். அதேபோல, கொஞ்சம் தேன், சர்க்கரை மற்றும் தக்காளி ஜூஸ் கலந்து முகத்தில் அப்ளை செய்து ஊறவைத்துக் கழுவுவேன். நிச்சயம் இவை நல்ல பலன் கொடுக்கும். உடலின் டானிங் நீங்க, புளித்த தயிர் மற்றும் எலுமிச்சை கலந்து உடலில் தேய்த்து குளிக்கலாம்.

சருமத்தைப் போலவே உடல் மற்றும் மனஆரோக்கியமும் மிகவும் முக்கியம். அதற்கு சில எளிமையான உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வேன். ஷூட்டிங் இருக்கும் நாட்களில் இவற்றைச் செய்வது கொஞ்சம் கடினம்தான். என்றாலும், உடல் நலமோடு இருக்கவேண்டும்! அனைவரும். உடல் மற்றும் மனநலனுக்காக ஏதாவதொரு வகையில் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அதேபோல இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வது நல்லது. கருவளையம், சரும சுருக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட நீண்ட நேர அமைதியான தூக்கம் அவசியம்.

என்னுடைய உணவில் தினசரி பழங்கள் இல்லாமல் இருக்காது. பெரும்பாலான நாட்களில் என்னுடைய காலை உணவு, பழங்கள் மட்டும்தான். ஆப்பிள், வாழை, ஆரஞ்சு மற்றும் அதனோடு கொஞ்சம் நட்ஸ் வகைகளைச் சேர்த்து தினமும் சாப்பிடுவேன். மதியம், ப்ரவுன் ரைஸ், காய்கறி பொரியல். இப்படிதான் என்னுடைய டயட் இருக்கும். எனக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதனால், கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான டயட்டை தான் பின்பற்றுகிறேன்.

ஹீட்டர் அதிகம் உபயோகிப்பதால், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்காக வாரம் ஒருமுறை ஸ்பெஷல் பேக் ரெடி செய்து பயன்படுத்துவேன். நல்லெண்ணெய்யை மிதமாக சுட வைத்து, அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்வேன். இந்த எண்ணெய்யின் ஒரு பங்கில் சிறிய வெங்காயத்தின் ஜூஸ், தேங்காய்ப் பால் மற்றும் கொஞ்சம் கற்றாழை கலந்து பிரித்து வைத்துக்கொள்வேன். பிறகு, முதலில் எண்ணெய்யில் நன்கு மசாஜ் செய்தபிறகு, வெங்காய ஜூஸ் கலவையைக் கொண்டு மசாஜ் செய்யவேண்டும். இறுதியாக, கனிந்த வாழைப்பழத்தை அரைத்து பேக் போன்று போட்டுக்கொண்டு, சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம். இப்படி செய்து வந்தால், நிச்சயம் தலைமுடி வலுவாகவும் மிருதுவாகவும் மாறும்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Bharathi kannamma actress rupa sree beauty skincare tips tamil news

Best of Express