சென்னை எத்திராஜ் காலேஜ் கொடுத்த கலர்ஃபுல் லைஃப்.. பாரதி கண்ணம்மா அஞ்சலி பிளாஷ்பேக்!

அக்காவை பழி வாங்க வில்லத்தனங்களை செய்பவர் அஞ்சலி.

bharathi kannamma anjali akhil bharathi kannamma
bharathi kannamma anjali akhil bharathi kannamma

bharathi kannamma anjali akhil bharathi kannamma : விஜய் டிவி-யின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், கண்ணம்மாவின் தங்கையாக நடித்து, பல வழிகளில் அக்காவை பழி வாங்க வில்லத்தனங்களை செய்பவர் அஞ்சலி.

சீரியலில் படு மோசமான வில்லி போல் தோற்றும் அஞ்சலியின் நிஜப்பெயர் கண்மணி மனோகரன். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கண்மணி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். இவரை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ஸ்வீட்டி. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பிற்காலத்தில் ஒரு ஈஸியான வேலையை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் கண்மணிக்கு.

அப்போது அவரது மனதுக்குள் உதித்தது தான் நடிப்புத் துறை. ஒரு நாள், ஆடிஷன் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பார்த்த கண்மணி, தனது புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அடுத்த நாள், பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட்டிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.

செலக்ட் ஆவோமா மாட்டோமா என பாதி சந்தேகத்தில் அந்த ஆடிஷனில் கலந்துக் கொண்டாராம் கண்மணி. ஆனால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் பாரதி கண்ணம்மா குழுவினர். அந்த சீரியலின் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடிப்போம் என, கனவில் கூட யோசிக்கவில்லையாம் கண்மணி. இருப்பினும் தனது இயல்பான ஜாலி கேரக்டருக்கு கான்ட்ராஸ்டாக வில்லியாக நடிப்பதில் சில நாட்கள் சிரமம் இருந்ததாம்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannamma anjali akhil bharathi kannamma anjali instagram kanmani manoharan anjali

Next Story
பெஸ்ட் சைடிஷ்.. தக்காளி தொக்கு மேக்கிங்!Onion Tomato Thokku recipe tomato Thokku
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express