பயம், மட்டன், பசும்பால், யோகா – ப்ரெக்னென்ட் ஃபரீனா ஷேரிங்ஸ்!

Bharathi Kannamma Farina Azad about her Pregnancy Tamil News னக்கு மிகவும் பிடித்த சிக்கன் இப்போ சாப்பிடறதில்லை. ஆனால், இதுவரை சாப்பிடாத மட்டன், பசும்பால் உள்ளிட்டவற்றை நிறைய சாப்பிடுகிறேன்.

Bharathi Kannamma Farina Azad about her Pregnancy Tamil News
Bharathi Kannamma Farina Azad about her Pregnancy Tamil News

Bharathi Kannamma Farina Azad about her Pregnancy Tamil News : நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தன் திரைப் பயணத்தைத் தொடங்கிய ஃபரீனா, தற்போது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் முக்கிய வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில், கர்ப்பமான ஃபரீனா, தான் எப்படி இந்த தருணங்களை எதிர்கொண்டு வருகிறார் என்பதை சமீபத்தில் ஓர் காணொளியில் பகிர்ந்துகொண்டார்.

“ஹார்மோனல் மாற்றம், ஷூட், உடல் ரீதியான மாற்றங்கள் என இதையெல்லாம் எதிர்கொள்ளக் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அதைவிட, போஸ்ட்பார்ட்டம் சிக்கல்களை எல்லாம் நினைத்தால் இன்னும் பீதியாகிறது. இதை எல்லாவற்றையும் விட நம்மைச் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் அட்வைஸ் தாங்க முடியவில்லை. முடி வெட்டாத, நகம் வெட்டாத என்று சொல்வதெல்லாம் போதும்.

இந்த விஷயத்தை என் கணவருக்கு அடுத்து, என்னுடைய இயக்குநருக்குத்தான் தெரிவித்தேன். பயங்கர ஷாக் ஆன அவர், ‘சந்தோஷம்’ என்று கொஞ்சம்கூட சந்தோஷமே இல்லாமல் சொன்னார். ஆனால், அதற்குப் பிறகு அவர் மட்டுமல்ல எங்கள் பாரதி கண்ணம்மா குழுவே என்னைத் தாங்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு விஷயத்திலேயும் அவ்வளவு அக்கறை எடுத்துக் கவனித்துக்கொண்டனர்.

எனக்குப் பிடித்த உணவுகளை சமைத்துக் கொண்டு வருவது, மாங்காய் பறித்துத் தருவது, கை கால்கள் அழுத்தி விடுவது என எனக்காக ஏராளமான விஷயங்களை செய்தனர். எனக்கு மிகவும் பிடித்த சிக்கன் இப்போ சாப்பிடறதில்லை. ஆனால், இதுவரை சாப்பிடாத மட்டன், பசும்பால் உள்ளிட்டவற்றை நிறைய சாப்பிடுகிறேன்.

காலையில் எழுந்ததும் அனைவரும் பிராணாயாமம் செய்யுங்கள். நிச்சயம் உடல் மற்றும் மனதளவில் மாற்றங்களை உணர்வீர்கள். அதேபோல நான் சூரிய நமஸ்காரம் செய்கிறேன். அதுவும் நல்ல மாற்றத்தைத் தருகிறது”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannamma farina azad about her pregnancy tamil news

Next Story
இந்த 5 பொருட்கள் இருக்கிறதா? உங்க கிச்சன்தான் பெஸ்ட் பார்மசி!immunity
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com