Bharathi Kannamma Farina Azad Beauty and Skincare Secrets Tamil News
Bharathi Kannamma Farina Azad Beauty and Skincare Secrets Tamil News : பாரதி கண்ணம்மா சீரியலில் 'வெண்பா' கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஃபரீனா, தான் கருவுற்ற நாளிலிருந்து ஏராளமான விஷயங்களை மக்களோடு பகிர்ந்து வருகிறார். வித்தியாசமான போட்டோஷூட் முதல் கருவுற்று 7 மாதங்களாகியும் இன்னும் சீரியலில் நடித்து வருவது வரை இவர் மீதான விமர்சனங்களும் அக்கறையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அந்த வரிசையில், கர்ப்பகாலத்தில் தன்னுடைய எளிமையான சரும பாதுகாப்பு குறிப்புகளை பகிர்ந்துகொண்டார். எந்தவித செலவும் இல்லாமல், அனைவராலும் பின்பற்றக்கூடிய அந்த குறிப்புகள் இங்கே..
Advertisment
"என்னைப்பொறுத்த வரை முகம் ஃப்ரெஷாக இருக்க ஃபேஷியல், ப்ளீச்சிங் போன்றவற்றை செய்வது அனாவசியம். அதையெல்லாம் நான் நம்ப மாட்டேன். அழகு மற்றும் ஆரோக்கியமாகத் தெரிய வெளியில் பூசிக்கிறதைவிட, உடலுக்குள் இருந்து மாற்றங்களைக் கொடுக்கும் உணவு வகைகள்தான் முக்கியம். தினமும் சர்க்கரை இல்லாமல் ஃப்ரெஷ் ஜூஸ் குடித்து வந்தாலே போதும். நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். அதேபோல, தினமும் காலையில் இளநீர் குடிப்பது சருமத்திற்காக மட்டுமல்ல, உடலுக்கும் மிகவும் நல்லது.
Advertisment
Advertisements
வெறும் வயிற்றில் ABC ஜூஸ் குடிப்பதும் மிகவும் நல்லது. அதில் சர்க்கரைக்கு பதிலாக, எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்த்துக் குடிக்கலாம். ஃபேஷியல் பண்ணுவதைவிட இவை உங்களுக்கு நல்லா பலன் கொடுக்கும். அதிலும் இந்த ABC ஜூஸ் ரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. கர்ப்பமான பெண்கள் நிச்சயம் இதனைக் குடிப்பது ஆரோக்கியமானது.
சரும பாதுகாப்பிற்கென நான் பெரிதாக எதையும் செய்ய மாட்டேன். சிலர் டோனர், மாய்ஸ்ச்சரைசர் எல்லாம் உபயோகிப்பார்கள். ஆனால், நான் மேக்-அப் அகற்றுவதிலிருந்து சருமத்தை மாய்ஸ்ச்சரைஸ் செய்வது வரை எல்லாவற்றுக்கும் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவேன். இரவு தேங்காய் எண்ணெய் வைத்து மேக்-அப் அகற்றிவிட்டு, அப்புறம் அப்படியே விட்டுவிடுவேன். காலையில் முகம் கழுவி ஏதாவதொரு மாய்ஸ்ச்சரைசர் போட்டுக்கொள்வேன். அவ்வளவுதான் என்னுடைய ரொட்டின்.
என்னதான் ஷூட் இருந்தாலும், நான் நல்லா தூங்குவேன். என்னைப்பொறுத்த வரை நன்றாகத் தூங்குவது முக்கியம். இது உடல் உபாதைகளிலிருந்தும் கருவளையம் போன்ற சரும பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாக்கும். கருவளையத்திற்கு, உருளைக்கிழங்கு அரைத்து கண்களுக்குக் கீழ் வைத்துக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்திய டீ பேக் கண்களுக்குக் கீழ் வைத்து உறங்கலாம். இப்படிச் செய்வதனால், கருவளையம் குறையும்.
வெளியே எங்காவது செல்லவேண்டும், அதனால் உடனடியாக பளீச் சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள், காபி அல்லது மஞ்சள் பேக் போடலாம். எந்த வகையான காபி தூள் இருந்தாலும் சரி, அதில் தேன் மட்டும் கலந்து முகத்தில் அப்ளை செய்தாலும் நல்லா இருக்கும். அல்லது காபித் தூளில் தேன் மற்றும் பால் சேர்த்தும் அப்ளை செய்யலாம். அதேபோல கஸ்தூரி மஞ்சள் மற்றும் பால் அல்லது தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். முகம் கழுவும் நேரத்தில் இந்த பேக் போட்டு சிறிது நேரம் கழித்து வாஷ் செய்தால் க்ளோயிங் சருமம் உறுதி.
சமைக்கும் மஞ்சளை எக்காரணத்திற்கும் பயன்படுத்தக்கூடாது. அதேபோல, எந்த பேக் போட்டாலும் முகத்தில் மட்டும் போடக்கூடாது. கழுத்து மற்றும் கைகளுக்கும் போட்டால்தான், பார்ப்பதற்கு ஒரேபோல இருக்கும். அதனால், முகத்திற்கு என்னவெல்லாம் செய்கிறோமோ அதை கை, கழுத்துக்கும் செய்யுங்கள்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil