முதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்!

தற்போது செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

bharathi kannamma lakshmi vijay tv serial
bharathi kannamma lakshmi vijay tv serial

bharathi kannamma lakshmi vijay tv serial : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றி அறிமுகமே தேவையில்லை. அந்த அலவிற்கு மக்கல் மனதில் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் TRPல் முதல் இடத்தில் இந்த சீரியல் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் பிரபலம். குறிப்பாக 8 வருடத்திற்கு பிறகு என கதை நகர்ந்த பிறகு பாரதி – கண்ணம்மா மகளாக காட்டும். அதாவது கண்ணம்மாவிடம் வலரும் செளந்தர்ய லட்சுமி கதாபாத்திரம் குழந்தைகளுக்கும் பிடித்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த பெண் குறித்த தேடல் இணையத்தில் அதிகம் இருந்தது. அதற்கு காரணம், இவரின் சுட்டித்தனமான நடிப்பு தான். இந்த குட்டி பெண் பிரபல சீரியல் நடிகரான ஷியாமின் இரண்டாவது மகள் எனப்து பலருக்கும் தெரியாத தகவல்.

அதுமட்டுமில்லை, இந்த குட்டி குழந்தை இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார். கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி இவர் தான். அதேபோல் ஷியாமின் முதல் மகள் இதற்கு முன் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்திருக்கிறார், தற்போது செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

மொத்தத்தில் குடும்பமே சீரியலில் பட்டையை கிளிப்பி வருகின்றனர்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannamma lakshmi vijay tv serial bharathi kannamma lakshmi baby lakshmi family

Next Story
உலக அழகி 2000-ன் போது ‘டெண்ட்ரில்’ ஹேர்ஸ்டைல் ஏன்? – சீக்ரெட் பகிர்ந்துகொள்ளும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ்Priyanka chopra unfinished miss world hairdo Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com