/tamil-ie/media/media_files/uploads/2021/01/w8-jpg-4.jpg)
Bharathi Kannamma serial Bharathi Kannamma roshni
bharathi kannamma roshini vijay tv bharathi kannamma : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலை பெண்கள் ரசித்தாலும், அதன் ஹீரோயின் கண்ணம்மாவை… அதாங்க ரோஷினிக்கு என்று தனி இளம் ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.
பொதுவாக டார்க் ஸ்கின் ஹீரோயின்களுக்கு நம்மூரில் வேல்யூ இருக்காது. இதனாலேயே மும்பை, கேரளா என மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ஹீரோயின்களிடம்…பொதுவாக டார்க் ஸ்கின் ஹீரோயின்களுக்கு நம்மூரில் வேல்யூ இருக்காது. இதனாலேயே மும்பை, கேரளா என மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ஹீரோயின்களிடம் தான் நமது ஹீரோக்கள் அதிகம் டூயட் பாடி வருகிறார்கள்.
சினிமாவில் மட்டுமல்ல… சீரியலிலும் கூட பெரும்பாலும் இந்த நிலை தான்.ஆனால், அவற்றிற்கெல்லாம் விதிவிலக்காக தமிழ் சீரியல் உலகில் இளைஞர்களின் பல்ஸை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார் தமிழ்ப் பெண் ரோஷினி ஹரிப்ரியன்.
அவரைப் பற்றிய சில தகவல் உங்களுக்காக,ரோஷ்னி ஹரிப்ரியன் ஆகஸ்ட் 14, 1992 அன்று சென்னையில் பிறந்தவர்.சென்னையின் செயின்ட் மேரி மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அர்ச்சனா ஆர்த்தி இயக்கிய “ஸ்கார்ஸ் ஆஃப் சொசைட்டி” என்ற தமிழ் குறும்படத்தில் ரோஷினி அறிமுகமானார்.மனம் டெக்ஸ்டைல், மேத்தா ஜூவல்லரி மற்றும் அனந்தம் சில்க்ஸ் போன்ற சில பிரபலமான விளம்பரங்களில் அவர் தோன்றியுள்ளார்.
இவருக்கு தமிழகம் தாண்டியும் ரசிகர்கள் இருப்பது கூடுதல் ஸ்பெஷல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.