Advertisment

16 மாடிக் கட்டிடம்... தினமும் 3 முறை ஏறி இறங்கிய வெண்பா! ஃபிட்னஸ் சீக்ரெட்

Bharathi Kannamma Serial Farina Azad Weight Loss Secrets "16 மாடிக் கட்டடத்தை தினமும் 3 மூன்று முறை ஏறி இறங்கினேன்"

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bharathi Kannamma Serial Venba Farina Azad Weight Loss Secrets Fitness Tamil

Bharathi Kannamma Serial Venba Farina Azad Weight Loss

Bharathi Kannamma Venba Fitness Secrets : 'ஃபரினா ஆசாத்' என்கிற இவருடைய உண்மையான பெயரைவிட 'வெண்பா' என்றால்தான் அனைவர்க்கும் பரீட்சையம். தொலைக்காட்சி தொடர்களில் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தை பெற்றிருக்கும் விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' தொடரில் எரிச்சலூட்டும் வில்லியாக வரும் இவர், உண்மையில் ரொம்ப ஸ்வீட். ஃபிட்னெஸ் என்றால் 'ஜீரோ' உடலமைப்பைக் கொண்டிருந்தால்தான் முடியும் என்கிற ஸ்டீரியோடைப்பை உடைத்தவர் ஃபரீனா எனலாம். சமீபத்தில் இவர் பகிர்ந்துகொண்ட ஃபிட்னெஸ் ரகசியங்களைப் பார்க்கலாம்.

Advertisment

Bharathi Kannamma Serial Venba Farina Azad Weight Loss Secrets Fitness Tamil Bharathi Kannamma Serial Venba

முன்பைவிட அதிகளவு எடை குறைந்திருக்கும் ஃபரீனா. கடந்த வருடம் லாக் டவுனை முழுமையாகப் பயன்படுத்தி அதிகப்படியான எடையைக் குறைத்திருக்கிறார். வீட்டிலேயே சாப்பிட்டு உறங்கி அதிகமாக எடை போட்டிருப்பவர்களுக்கு மத்தியில் இவர் சொல்வது வித்தியாசமாகவே இருக்கிறது. அதிலும் ஜிம் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் எப்படி இது சாத்தியம் என்று கேட்பவர்களுக்கு, வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சி செய்ய சில எளிமையான டிப்ஸ்களையும் கொடுக்கிறார்.

Bharathi Kannamma Serial Venba Farina Azad Weight Loss Secrets Fitness Tamil Bharathi Kannamma Serial Farina Azad Weight Loss Secrets

"பார்ப்பதற்கு கொழு கொழுவென இருந்தாலும், ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய பாலிசி" என்று தொடங்கும் வெண்பா, சாரி ஃபரீனா, "தினமும் ஒரே போன்ற உடற்பயிற்சியைச் செய்ய மாட்டேன். ஒவ்வொரு நாள் வெவ்வேறு உடற்பயிற்சிகளை செய்வேன். குவாரன்டீனில் இருந்தபோது வீட்டிலிருந்தபடியே ஸ்க்வாட்ஸ், ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்தேன். அதுமட்டுமில்லாமல் 16 மாடிக் கட்டடத்தை தினமும் 3 மூன்று முறை ஏறி இறங்கினேன்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

உடற்பயிற்சி மட்டும் போதாது. அதுகூடவே சரியான டயட்டும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி, டயட் போன்றவற்றைப் பின்பற்றுபவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்கலாம். என்னதான் வேளைகளில் பிசியாக இருந்தால் வாரத்திற்கு மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். குண்டாக இருந்தாலும் பிரச்சனையில்லை. ஃபிட்டாக இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை நிச்சயம்" என்று மக்களுக்கான சிறிய டிப்ஸையும் கொடுத்திருக்கிறார் ஃபரீனா ஆசாத்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Bharathi Kannamma Serial Farina Azad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment