அர்த்தம் புரியாத வார்த்தைகளில் திட்டு வாங்கியிருக்கேன் - பாரதி கண்ணம்மா வெண்பா குமுறல்கள்!
Bharathi Kannamma Venba Farina Azad Lifestyle மனம் உடைந்து அழுதிருக்கிறேன். என்றாலும், அவர்கள் திட்டியது வெண்பாவை உன்னை இல்லை என்று என் நண்பர்களின் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கும்.
Bharathi Kannamma Venba Farina Azad Lifestyle மனம் உடைந்து அழுதிருக்கிறேன். என்றாலும், அவர்கள் திட்டியது வெண்பாவை உன்னை இல்லை என்று என் நண்பர்களின் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கும்.
Bharathi Kannamma Venba Farina Azad Lifestyle Tamil
Bharathi Kannamma Venba Farina Azad Lifestyle Tamil : தொகுப்பாளினியாக அறிமுகமாகி இப்போது 'பாரதி கண்ணம்மா' தொடர் மூலம் மக்களின் வெறுப்புகளைச் சம்பாதிக்கும் நம்பர் ஒன் வில்லியாக வளம் வந்துகொண்டிருக்கிறார் ஃபரீனா ஆசாத். போட்டோகிராப், ரசிகர்கள் கூட்டம் என பிசியாக இருக்கும் இவர், மற்றொரு பக்கம் பலரின் வெறுப்புகளை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். வெண்பா கதாபாத்திரத்தைப் பற்றி சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்டவை இங்கே.
Advertisment
"நடிக்க வருவேன் என்று கொஞ்சமும் யோசிக்கவில்லை. தொகுப்பாளினியாக என் வாழ்க்கையை ஆரம்பித்து, தொகுப்பாளினியாக வாழ்ந்து, தொகுப்பாளினியாக இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். அவ்வளவு பிடிக்கும் அந்த வேலை எனக்கு. அதனால், திரைப்படம் முதல் சீரியல் வரை ஏராளமான வாய்ப்புகளைத் தவிர்த்தேன். ஆனால், பிரவீன் சார் பற்றி நல்ல விதமாக நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். விருப்பமில்லாமல் இந்த பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பை ஏற்றேன்.
Advertisment
Advertisements
கதை மிகவும் மொக்கையாக இருக்கிறதே என்கிற உணர்வு என்னுள் இருந்துகொண்டே இருந்தது. கடத்தி சொல்லும்போது பிடிக்கவில்லை என்றாலும், அதனை ஸ்க்ரீனில் பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருந்தது. என் நடிப்பைப் பார்த்து எனக்கே ஆச்சரியம். அப்போ ஃபீல் பண்ணினேன், ஏன்டா நமக்கு வந்து பெரிய பெரிய வாய்ப்புகளையெல்லாம் மிஸ் செய்தோம் என்று.
ஆனால், வெளியே செல்லும்போது எந்த அளவிற்கு நம்முடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்களோ, அதே அளவிற்கு என்னை திட்டவும் செய்திருக்கிறார்கள். அர்த்தம் தெரியாத வார்த்தைகளில் திட்டு வாங்கியிருக்கிறேன். என்னுடன் சக நடிகர்கள் வெளியே வரும் பொது, அவர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார்கள், என்னிடம் என் காதுப்படவே உன்னை எனக்குப் பிடிக்காது என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் மனம் உடைந்து அழுதிருக்கிறேன். என்றாலும், அவர்கள் திட்டியது வெண்பாவை உன்னை இல்லை என்று என் நண்பர்களின் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கும்.
ஆனால், என்னுடைய வீட்டில் அப்படியே ஆப்போசிட். நானே எவ்வளவு கஷ்டப்பட்டு வில்லி பாவனைகளை செய்கிறேன். ஆனால், அதையெல்லாம் பார்த்து என் புருஷன் விழுந்து விழுந்து சிரிப்பார். அதைவிட என் நண்பர்கள் வேற லெவல். என்னை காமெடி பிஸாக மாற்றிக் கலாய்த்துத் தள்ளிவிடுவார்கள்" என்றுகூறி புன்னகையிக்கிறார் ஃபரீனா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil