/indian-express-tamil/media/media_files/2025/03/27/nAOSLZd4dNWfhmdiBYtd.jpg)
இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள்,அரசியல் கட்சித்தலைவர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. அப்போது பாரதிராஜா கதறி அழுதது பார்ப்பவர்களின் நெஞ்சத்தை கனக்க வைத்தது.
ஒருமாதத்திற்கு முன் மனோஜ் பாரதிக்கு தனியார் மருத்துவமனையில் ஓபன்-ஹார்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். கடந்த 3 நாட்களாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜவின் நண்பரும் அவரின் 50 வருட குடும்ப நல மருத்துவருமான சொக்கலிங்கம் மனோஜ் இறப்பு குறித்து பல்வேறு தகவல்களை பேசினார். இதயம் என்பது ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கக் கூடியது. அவை சீராக இயங்க நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இதயம் இயங்காமல் செயழிலக்க கூடும் என்றார் மருத்துவர் சொக்கலிங்கம். உணர்வு, உணவு, உடற்பயிற்சி ஆகிய மூன்றும்தான் மனிதனின் அடிப்படை என்றும் அவர் கூறினார்.
மனோஜ் சிறிய வயதில் இறந்ததற்கான காரணம் என்ன? அவரது உடல் நிலைக்கு என்ன ஆனது? என்பது குறித்தும் விளக்கினார் மருத்துவர் சொக்கலிங்கம்.20 முதல் 30 வயதுக்குள் ஆண்கள்/பெண்கள் 90 பேர் ஒருநாளைக்கு இந்தியாவில் உயிரிழக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்தக்கட்டு உருவாகி இதயம் செயலிழக்கும் அபாயம் உள்ளது. மற்றொரு காரணம், திடீர் அதிர்ச்சி, வருத்தம், கோபம் ஏற்படும்போது அட்ரினல் சுரந்து இதய ரத்தக் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு ரத்தம் தேங்கி ரத்தக்கட்டு நிகழ வாய்ப்பு உள்ளது என்றும், அதிகப்படியான அழுத்தம் ஏற்படும் போது ரத்தம் உறைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
நன்றி: Galatta Voice
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.