மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று (11.12.2023) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மகாகவி பாரதியாருடன் தொடர்பில் இருந்த விடுதலைப்போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நினைவுப் பரிசு மற்றும் சால்வை அணிவித்து பாராட்டி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, கே.எஸ்.பி. ரமேஷ் மற்றும் கலை மற்றும் பண்பாடு துறை அரசுச் செயலர் நெடுஞ்செழியன், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக பாரதி பூங்காவில் அமைந்துள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். ஆர், சட்டமன்ற உறுப்பினர் ஆர். பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“