எனக்கு 40 வயசு ஆச்சு… ஸ்கின் இளமையா இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க; தொகுப்பாளினி பாவனா ப்யூட்டி டிப்ஸ்!
நான் ஆரம்பத்துல கொஞ்சம் குண்டாதான் இருந்தேன். ஆனா, விளையாட்டுத் துறைக்கு வந்த பிறகுதான் உடல்நலத்தின் மீது எனக்கு அக்கறை வரத் தொடங்கிச்சு. 30 வயசுக்கு மேல கண்டிப்பா நம்ம உடம்பைப் பார்த்துக்க வேண்டும்,
நான் ஆரம்பத்துல கொஞ்சம் குண்டாதான் இருந்தேன். ஆனா, விளையாட்டுத் துறைக்கு வந்த பிறகுதான் உடல்நலத்தின் மீது எனக்கு அக்கறை வரத் தொடங்கிச்சு. 30 வயசுக்கு மேல கண்டிப்பா நம்ம உடம்பைப் பார்த்துக்க வேண்டும்,
பிரபல தொகுப்பாளினி பவானா பாலகிருஷ்ணன் பற்றி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் குறைவு. கிரிக்கெட் வர்ணனையில் தொடங்கி பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவர் எப்படி எப்போதும் ஃபிட் ஆகவும், பொலிவுடனும் இருக்கிறார் என்பது பலருக்கும் ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கான பதில்தான், 'Say Swag' யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்துகொண்ட ரகசியங்கள்.
Advertisment
”நான் ஆரம்பத்துல கொஞ்சம் குண்டாதான் இருந்தேன். ஆனா, விளையாட்டுத் துறைக்கு வந்த பிறகுதான் உடல்நலத்தின் மீது எனக்கு அக்கறை வரத் தொடங்கிச்சு. 30 வயசுக்கு மேல கண்டிப்பா நம்ம உடம்பைப் பார்த்துக்க வேண்டும், இல்லனா பிறகு ரொம்ப கஷ்டப்படுவோம். இதை நான் உணர்ந்து கொண்டேன்.
என்னோட உடற்பயிற்சின்னு பார்த்தா, வாரத்துல நாலு நாள், ஒரு மணி நேரம் ஜிம்ல பயிற்சி செய்வேன். அதுமட்டுமில்லாம, சின்னச் சின்ன விஷயங்களையும் ஃபாலோ பண்றேன். லிஃப்ட் பயன்படுத்துறதுக்கு பதிலா மாடிப்படி ஏறி இறங்குறது, போன் பேசும்போது சும்மா நிக்காம நடக்கிறது, சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் வாக்கிங் போறதுன்னு என் அன்றாட வாழ்க்கையில இந்த மாதிரி விஷயங்களை சேர்த்துகிட்டேன். இது என் ஃபிட்னஸ்க்கு ரொம்பவே உதவியா இருக்கு!
உணவு: அளவோட சாப்பிடுங்க!
Advertisment
Advertisements
நான் எந்த டயட்டையும் ஃபாலோ பண்றதில்லை. வறுத்த உணவுகள், இனிப்புனு எல்லாத்தையும் சாப்பிடுவேன். ஆனா, அளவோடு சாப்பிடுறதுல நான் ரொம்ப கவனமா இருப்பேன். குறிப்பா, மாலை நாலு மணிக்கு அப்புறம் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைச்சுப்பேன். ஆனா, எல்லா நேரத்திலும் புரதச்சத்து நிறைஞ்ச உணவுகளை அதிகமா சாப்பிடுவேன். சிக்கன், முட்டை, பருப்புன்னு புரதச்சத்தை எப்பவும் என் சாப்பாட்டுல சேர்த்துப்பேன்.
என்னோட சரும பராமரிப்பு ரொம்ப சிம்பிள். காலையில மூன்று விஷயங்கள், நைட்ல அஞ்சு விஷயங்கள். காலையில முகம் கழுவுன உடனே, மாய்ஸ்சுரைசரும், சன்ஸ்கிரீனும் கண்டிப்பா போடுவேன். நைட்ல, கூடுதலாக டோனர், கண் கிரீம் பயன்படுத்துவேன்.
கூந்தல் பராமரிப்புன்னா, தலைமுடிக்கு உள்ளேயும் வெளியேயும் அக்கறை கொடுக்க வேண்டும். ஹேர் ட்ரையர் பயன்படுத்த மாட்டேன், இயற்கை முறையில காய வைப்பேன். குளிச்ச பிறகு லீவ்-இன் கண்டிஷனர் போடுவேன். முடி வளர்ச்சிக்கு தேவையான சப்ளிமெண்ட்களும் எடுத்துப்பேன். இது என் கூந்தலுக்கு நல்ல பலன் கொடுக்குது.
மன அமைதி ரொம்ப முக்கியம்!
வேலைன்னு பார்த்தா, மாசத்துல 12 முதல் 17 நாள்கள்தான் வேலை செய்வேன். 20 நாட்களுக்கு மேல வேலை பண்றதில்லை. இது எனக்கு ஓய்வு எடுக்கவும், மன அழுத்தமில்லாமல் இருக்கவும் உதவுது. தினமும் ஒரு காபி குடிப்பேன். உடல் அமிலத்தன்மை அதிகரிக்காம இருக்க, தயிர், இளநீர், கிரீன் டீ குடிச்சு பேலன்ஸ் பண்ணிப்பேன்.
உடற்பயிற்சி செய்யும்போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, ஒரு லிட்டர் தண்ணீர்ல வைட்டமின் சி டேப்லட் போட்டு குடிப்பேன். இது புத்துணர்ச்சியாகவும், உடலுக்கு நல்லதாகவும் இருக்கு.
அழகு என்றால் என்ன?
"அழகுன்னா என்ன?"ன்னு என்கிட்ட கேட்டா, நான் ஒரு விஷயம்தான் சொல்லுவேன். என்ன வயசு ஆனாலும், உங்களை நீங்க அழகாக ஃபீல் பண்ண வேண்டும். கண்ணாடி முன்னாடி போகும்போது, "நாம அழகா இருக்கோம்"ன்னு உங்களுக்கு நீங்களே சொல்லிக்கணும். தன்னம்பிக்கையோட நின்னு, இந்த உலகத்தை எதிர்கொள்ளத் தயாராக இருந்தா, அதுதான் உண்மையான அழகு! என்கிறார் பாவனா.
இதைப் படித்த பிறகு, பவானா சொல்வது போல, ஆரோக்கியம் மற்றும் அழகு என்பது பெரிய விஷயங்கள் இல்லை, நாம் தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் சில எளிய பழக்கவழக்கங்கள்தான். நீங்களும் இந்த ஆலோசனைகளைப் பின்பற்றி, ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடங்கலாமே!