big boss vanitha : விஜய் டெலிவிஷனில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 3 இனிதே நிறைவடைந்தாலும் அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் குறித்தும், அவர்கள் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகள், டான்ஸ் வீடியோ நிகழ்ச்சி குறித்தும் அவர்களின் பேட்டி என தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி இணையத்தில் கசிந்துக் கொண்டே தான் இருக்கிறது.
Advertisment
மற்ற இரண்டு சீசன்கள் முடிவடைந்த உடனே அதுக் குறித்த தாக்கம் பார்வையாளர்களிடம் இருந்து 2 நாட்களில் விலகி விட்டது. ஆனால் இந்த சீசன் அப்படி இல்லை தொடர்ந்து மக்கள் பிக் பாஸ் பற்றியே அதிகம் பேசுகின்றனர். அதுக் குறித்த செய்திகளை படிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயக்குமார் இப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
வீட்டில் அவர் போட்ட சண்டைகள், கேட்ட நியாயமான கேள்விகள், சில சர்ச்சைகள் என வனிதாவால் தான் பிக் பாஸ் டிஆர்பி எகிற தொடங்கியது. இணையத்தில் அவருக்கு ஆதரவாகவும் சரி எதிராகவும் சரி சரமாரியான விமர்சனங்கள் எழுந்தன. இவை அனைத்திற்கு சளைக்காமல் பதில் கூறி பட்டையை கிளப்பினார் வனிதா. இவரின் பேச்சை கண்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனே பலமுறை ச்ச்ச்ச்ச்பா முடியல என்ற ரியாக்ஷன்லாம் தந்து இருக்காருன்னா பார்த்துக்கோங்க.
Advertisment
Advertisements
இப்போது வனிதா வீட்டில் நடந்த சுபகர நிகழ்ச்சி குறித்த ஃபோட்டோஸ்களை தான் இங்கே பார்க்க போகிறீர்கள். விஜயக்குமார் - மஞ்சுளா தம்பதிகளின் மகளான வனிதா இதற்கு முன்பு நடிகர் விஜய் உடன் சந்திரலேகா படத்தில் நடித்துள்ளார்.அதை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். ஏற்கனவே 2 திருமணம், குழந்தை கடத்தல் சர்ச்சை, சொத்து தகராறு என வனிதா பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். இதனால் அவரது மொத்த குடும்பமும் அவரை ஒதுக்கி விட்டதாக கவலையுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இதுக் குறித்து பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் வனிதாவின் மூத்தமகள் ஜோத்விகாவுக்கு அண்மையில் மஞ்சள் நீராட்டு விழா நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொண்ட அனைத்து பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டில் வனிதாவுக்கு கிடைத்த நிஜமான சொந்தங்கள் தான். அவர் அண்ணன் அண்ணன் என அழைத்த சேரன் தொடங்கி பாத்திமா பாபு, லாஸ்லியா என அனைத்து பிக் பாஸ் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சொந்தங்கள் போல் சிறப்பாக நடத்தி முடித்தனர்.
வனிதாவிற்கு எல்லா விதத்திலும் பக்க பலமாக இருந்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதாவுக்கு உண்மையில் ஒரு குடும்பம் உருவாகி இருப்பது பார்ப்பதற்கும் மகிழ்ச்சிக்கரமாக அமைந்துள்ளது.