/tamil-ie/media/media_files/uploads/2019/11/a34-1.jpg)
bigg-boss-3-winner mugen rao announced his girl friend - 'ரகசிய காதலி அல்ல; இனி எல்லாம் அவளே' - புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் வின்னர் முகென்
பிக்பாஸ் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னர் முகென் ராவ், நல்ல பையன், நல்ல பாடகன், நல்ல நண்பன், நல்ல தோழன் என்ற பல நல்ல பெயர்களை பிக்பாஸ் வீட்டிலும் எடுத்தார்... பிக்பாஸ் ரசிகர்களிடமும் பெற்றார். ஆனால், நல்ல காதலனா? என்று சிலர் கேள்விக்குறி வைக்கவும் தவறவில்லை.
பிக்பாஸ் வீட்டில் அபிராமி, முகேனுடன் நெருங்கிப் பழகிய போது, எனக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார் என்று சொன்னாரே தவிர, அபிராமி அப்போதும் நெருங்கிப் பழகிய போது அதை தவிர்த்து செல்லவில்லை.
ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..
குறிப்பாக இரண்டாவது முறை வீட்டுக்குள் வந்த அனிதா, முகென் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். ஒருக்கட்டத்தில் அபியும் 'நீ அப்படித்தான் நடந்துகிட்ட' என்பது போல பேச முயல, முகென் கோபப்பட்டு முஷ்டி முறுக்கியதை ஆடியன்ஸ் பார்த்தார்கள்.
எனினும், முகென் பிக்பாஸ் வின்னராக அறிவிக்கப்பட்டார். நிகழ்ச்சியின் போதும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
இந்நிலையில், தனது காதலி யார் என்பதை முதன் முதலாக முகென் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது காதலி யாஸ்மின் பிறந்தநாளின் போது இதை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
மேலும், "என்னை விட மற்றவர்கள் மிக சிறப்பாக உனக்கு வாழ்த்து எழுதி உன்னை மகிழ்விக்கலாம். ஆனால், நான் உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். பிறந்தநாள் வாழ்த்துகள் என்னுள் பாதியே" என்று காதல் வரிகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.
மேலும் பார்க்க - தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரசிகர்களை கவர்ந்ததா ?
முன்னதாக, மலேசியாவில் முகெனின் ரகசிய காதலி, யார் இந்த பெண் என்றெல்லாம் பல சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது முகெனே வெளிப்படையாக அறிவித்து அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.