காதல் மனைவி.. விருதுகளை குவித்த படங்கள்… இது பிக் பாஸ் ஆரி லைஃப் ஸ்டோரி!

தவிர நெடுஞ்சாலை படத்துக் காக சிறந்த நடிகருக்க்கான வி4 விருது மற்றும் சினிமா ரசிகர்கள் சங்க விருதும் பெற்றார்.

bigg boss aari wife bigg boss tamil aari marriage
bigg boss aari wife bigg boss tamil aari marriage

bigg boss aari wife bigg boss tamil aari marriage : விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக களமிறங்கியுள்ள நடிகரும் இயக்குனருமான ஆரி, லைஃப் ஸ்டோரியை பார்க்கலாம் வாங்க.

‘நெடுஞ்சாலை’ , ‘மாயா’ என்ற படங்களின் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர்.இவர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் நடித்து வெளிவராத முதல் படத்தின் கதாநாயகியை தான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார். திருமணத்திற்குப் பிறகு நடிகர் ஆரி, நடிப்பது மட்டுமல்லாமல், சமுதாய நலன் கருதி நாட்டு விதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யுமாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவருடைய குரல் ஓங்கி நின்றது.

இப்படி சமூக மாற்றங்களை ஏற்படுத்தத் துடிக்கும் ஆரி, பிக்பாஸ் நிகழ்ச்சியை இளம்தலைமுறையினருக்கு வழிகாட்டியாக நேர்மையுடன் விளையாடுவேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஆரியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சேரன், நவ்யா நாயர் நடிக்க டிவி சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து படத்தில் அறிமுகமானார். இப்படம் திரைப்பட விழாக் களில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றது. இதையடுத்து தமிழ் சினிமாவின் லெஜெண்ட்- சாதனையாளர்கள் இணைந்து வழங்கிய படத்தில் நடித்தி ருந்தார். இயக்குனர் சிகரம் கே.பால சந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா இணைந்து நடித்த ரெட்டை சுழி என்ற படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். அதில் ஹீரோவாக அறிமுகமானார் ஆரி. இப்படத்தை தாமிரா இயக்கி இருந்தார். ஹீரோயினாக அஞ்சலி நடித்தார். இப்படம் வெளியாகி பெரிய அளவில் யாருக்கும் கைகொடுக்கவில்லை.

ஆரிக்கு திருப்புமுனை படமாக நெடுஞ் சாலை வந்தது. இந்த படத்தில் நடிப்ப தற்காக தனது உடல் எடையில் நிறைய கிலோக்களை கூட்டினார். அதற்காக அவர் இரண்டு வருடம் செலவழித்தார். அடுத்து கதை எண் 6 என்ற படத்தில் நடித்தார். இதற்காக உடல் எடையில் 14 கிலோ குறைத்தார். பிறகு அமானுஷ்ய கதையான மாயா படத்தில் நயன்தாராவுடன் நடித்தார்.

நதியா என்பவரை ஆரி மணந்தார். இவர் லண்டனை சேர்ந்த இலங்கை பெண். சென்னை காளிகாம்பாள் கோயிலில் இவர்கள் திருமணம் கடந்த 2015ம் ஆண்டு நடந்தது. முன்னதாக நிச்சய தார்த்தம், திருமண வரவேற்பு தாஜ் கன்னிமாரா நடசத்திர ஓட்டலில் நடந்தது ஆரி நடித்த படங்கள் என்னவோ குறைவுதான் ஆனால் விருதுகள் அவரது வீட்டு செல்ப்பை நிறைத்துவிட்டது. நெடுஞ்சாலை படத்துக் காக சிறந்த நடிகருக்க்கான வி4 விருது மற்றும் சினிமா ரசிகர்கள் சங்க விருதும் பெற்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

SOURCE: FACEBOOK

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss aari wife bigg boss tamil aari marriage vijat tv bigg boss hotstar aari family

Next Story
மாலை நேர உணவு… தக்காளி சூப்!tomato soup recipe tomato soup recipe in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com