scorecardresearch

சூரியநமஸ்காரம், படிக்கட்டு ஏறுவது.. ‘பிக் பாஸ்’ அபிராமியின் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

Bigg Boss Abirami FItness Secrets கண்டபடி வீடியோக்களில் வருவதைப் பார்த்ததெல்லாம் முயற்சி செய்யவே வேண்டாம்.

Bigg Boss Abirami FItness Secrets Beauty Tips Tamil News
Bigg Boss Abirami FItness Secrets

Bigg Boss Abirami FItness Secrets Tamil News : மாடல், டான்சர், நடிகை எனப் பன்முகத்தன்மைகொண்ட ‘பிக் பாஸ்’ அபிராமி, ஃபிட்னெஸ்ஸிலும் அதிகம் கவனம் செலுத்துபவர். தன்னுடைய முகமலர்ச்சிக்கும், தெளிவான சிந்தனைக்கும் காரணம் ஃபிட்னெஸ்தான் என்று கூறும் அபிராமி, தன்னுடைய அன்றாட ஃபிட்னெஸ் சீக்ரெட்டுகளையும் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

Abirami Venkatachalam

“ஃபிட்னெஸ் என்றால் ரொம்ப கஷ்டப்படவேண்டும் என்கிற அவசியமில்லை. சூரிய நமஸ்காரம் போதும். சூரிய ஒளி உடலுக்கு ரொம்ப நல்லது. முதுகு வலி உள்ளவர்கள், மூட்டு வலியால் கஷ்டப்படுறவங்க, கவனச் சிதறல் இருப்பவர்கள் இந்த சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் பலன் கிடைக்கும். ஆனால், சரியான ட்ரெயினர் முக்கியம். கண்டபடி வீடியோக்களில் வருவதைப் பார்த்ததெல்லாம் முயற்சி செய்யவே வேண்டாம்.

Bigg Boss Abirami Latest Photos

ஒரே  டிவி பார்ப்பது, தண்ணீர் குடிப்பதற்குகூட எந்திரிக்காமல் சோம்பல் தனமாக இருப்பது, இதெல்லாம் உடல்நலத்திற்கு மிகவும் கேடு. உடலுக்கு சரியான பயிற்சி முக்கியம். அதற்கென ஜிம்முக்கு போகவேண்டும் என்கிற அவசியமில்லை. வீட்டில் வேலைகள் செய்வது, படி ஏறி இறங்குவது போன்ற எளிமையான வேலைப்பாடுகளைச் செய்யலாம்.

Bigg Boss Abirami Fitness Secrets

சுத்தமான காற்றை சுவாசிப்பது மிகவும் முக்கியம். அதனால், மொட்டைமாடியில் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாம். முடிந்தால் பூங்காவிற்குச் சென்று நடைப்பயிற்சி செய்யலாம். அதேபோல தியானம் செய்வதும் ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் அவசியம். இந்தக் காலத்தில் சிறுகுழந்தைகள்கூட ஸ்ட்ரெஸ் என்கிற வார்த்தையை சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட இந்த ஸ்ட்ரெஸ்ஸை ஒழிக்க தியானம் நிச்சயம் உதவும். கண்களை மூடி தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்தாலே போதும். நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீர்கள்.”

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss abirami fitness secrets beauty tips tamil news