New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/As.jpg)
Bigg Boss Anita Sampath Latest Viral Video Tamil News
Bigg Boss Anita Sampath Latest Viral Video Tamil News
Bigg Boss Anita Sampath Latest Viral Video Tamil News : விமர்சனங்களில் அவ்வப்போது சிக்கிக்கொள்ளும் அனிதா சம்பத், பல தடைகளை உடைத்து தனக்கென தனி ரசிகர்களையும் கொண்டிருக்கிறார். தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்தவர், அதில் ஏராளமான பயனுள்ள காணொளிகளை அப்லோட் செய்து வருகிறார். 6 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை வைத்திருக்கும் அனிதாவின் சேனலில் சமீபத்தில் வீட்டிலேயே குறைந்த செலவில் அழகாக மேக்-அப் எப்படி செய்வது என்பதைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
"இந்த லாக்-டவுனில் பெரும்பாலும் அனைவரும் வீட்டிலேயே திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட விழாக்களை நடத்துகின்றனர். சாப்பாடு உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்யும் அளவிற்கு மேக்-அப்பிறகும் செலவு செய்ய நேரிடும். ஆனால், வெறும் 2000 முதல் 2500 வரை செலவு செய்தாலே போதும். அழகான மேக்-அப் நாமே வீட்டில் இருந்தபடி செய்துகொள்ளலாம். அதைத்தான் இந்த காணொளியில் பார்க்கப்போகிறோம்.
நீங்கள் வாங்க வேண்டிய பொருள்கள் என்னவென்றும் அதன் விலையையும் முதலில் பார்க்கலாம்.
ஃபவுண்டேஷன் - ரூ.400
கன்சீலர் - ரூ.350
காஜல் - ரூ.100
ஐ லைனர் - ரூ.150 அல்லது ஜெல் ஐ லைனர் - ரூ.200-250
குட்டி ஐ ஷேடோ பேலட் - ரூ.250- 400
லிப்ஸ்டிக் - ரூ.150 - 200. ப்ராண்ட் பொறுத்து 250 வரை செலவு செய்யலாம்.
பிளஷ், கான்ட்டூர் மற்றும் ஹைலையிட்டர் பேக் - ரூ.300-500
ஒட்டுமொத்தமாக ரூ.2000 அதிகபட்சம் ரூ.2500 மட்டுமே செலவாகும்.
அடுத்து இதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். முதலில் ஃபேஸ் வாஷ் செய்து பிறகு மாய்ஸ்ச்சரைசர் அப்ளை செய்யலாம். பிறகு நான் ப்ரைமர் போடுறேன். இது உபயோகிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறகு, உங்கள் சருமம் வறண்டது என்றால் தண்ணீர் பேஸ்டு கன்சீலர் போடலாம். எனக்கு எண்ணெய் சருமம் என்பதால், சருமம் க்ரீமி பேஸ்டு கன்சீலர் போடுகிறேன். ஆரஞ்சு நிற கன்சீலர் தொடர்ந்து, உங்கள் ஸ்கின்டோன் நிறத்தில் முகம் முழுவதும் போடுங்கள். பிறகு, டார்க் வண்ண கான்டூ பயன்படுத்துங்கள். இது, மூக்குப் பகுதியை ஷார்ப்பாக காண்பிக்கும்.
அதேபோல, கன்னங்களிலும் கான்டூர் செய்யலாம். பிறகு, ஐ ஷேடோ போடலாம். சிறிய கண்கள் என்றால், கண்களுக்குக் கீழும் ஷேடோ போடலாம். அடுத்ததாக ஐ லைனர், காஜல், ஐ லாஷ், ஐ ப்ரோ, லிப்ஸ்டிக், பிளஷ் போன்றவற்றை உபயோகிக்கவேண்டும். கடைசியாக லூஸ் பௌடர் போடலாம். அல்லது, வீட்டில் இருக்கும் பவுடரையும் உபயோகிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.