‘இது பிரபாவுக்கான சவால்’ – அனிதா சம்பத் புதிய யூடியூப் வீடியோவில் என்ன ஸ்பெஷல்?

Bigg Boss Anita Sampath Youtube Channel Challenge இருவரின் டாம் அண்ட் ஜெர்ரி உரையாடல் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருந்தது.

Bigg Boss Anita Sampath Youtube Channel Challenge Tamil News
Bigg Boss Anita Sampath Youtube Channel Challenge Tamil News

Bigg Boss Anita Sampath Youtube Channel Challenge Tamil News : செய்தி வாசிப்பாளராகப் பலரின் மனத்தைக் கொள்ளையடித்தவர் அனிதா சம்பத். ஆனால், அந்த பிம்பம் பிக் பாஸ் வீட்டிற்குச் சென்ற பிறகு குறைந்தது. என்றாலும், வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவருக்கு ஆதரவே அதிகம் பெருகியது. அதிலும், ‘யாருடா அந்த பிரபா’ என்கிற அளவிற்கு தன் கணவர் பற்றிய புராணங்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அடுக்கிவிட்டார்.

சமீபத்தில் தன்னுடைய யூடியூப் சேனலில், தன் கணவர் பிரபாவோடு இணைந்து மேக்-அப் பொருள்கள் சேலஞ் ஒன்றை செய்து காணொளி ஒன்றை அப்லோட் செய்திருக்கிறார். அதுதான் தற்போதைய வைரல் வீடியோ. ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை வைத்திருக்கும் அனிதா, கடந்த லாக்டவுன் காலகட்டத்தின் போதுதான் சேனல் ஆரம்பித்திருக்கிறார்.

இதில், அழகு குறிப்புகள், சமையல் வீடியோக்கள், ஷாப்பிங் டூர், சர்ப்ரைஸ் காணொளிகள் என ஏராளமான வித்தியாச வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அத்தனை காணொளிகளும் லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றிருக்கின்றன. அதிலும், சில அழகுக் குறிப்பு வீடியோக்கள் மில்லியன் வியூஸ்களை பெற்றிருக்கின்றது.

தனியாக  இல்லாமல், அவ்வப்போது தன் கணவர் பிரபாவையும் காணொளியில் பதிவு செய்வதுண்டு. அந்த வரிசையில் சமீபத்தில், தான் உபயோகிக்கும் மேக்-அப் பொருள்களைக் கொடுத்து, ஒன்றும் தெரியாத அந்த அப்பாவி மனிதரைக் கண்டுபிடிக்கச் சொல்லி சவால் செய்திருக்கிறார் அனிதா.

ப்ரைமர், ஷிம்மர், கன்சீலர் என விதவிதமான மேக்-அப் பொருள்களை அடுக்கி, அதை கண்டுபிடிக்கச் சொல்லி சவால். அதையும் சளைக்காமல், சிலவற்றை தவறாகவும் பலவற்றை சரியாகவும் கணித்து, அனிதாவின் சவாலில் வெற்றியும் பெற்றார். என்றாலும், இருவரின் டாம் அண்ட் ஜெர்ரி உரையாடல் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss anita sampath youtube channel challenge tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com