/tamil-ie/media/media_files/uploads/2021/07/Asp.jpg)
Bigg Boss Anitha Sampath Youtube Channel Review Tamil News
Bigg Boss Anitha Sampath Youtube Channel Review Tamil News : செய்தி வாசிப்பாளராக அறிமுகமான போதே அனிதா சம்பத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது இன்னும் அதிகமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் அனிதா. தொடக்கத்தில் வெறுப்புகளை சம்பாதித்திருந்தாலும், நிகழ்ச்சியின் முடிவில் ரசிகர்களையே பரிசாகப் பெற்றார். கொரோனா லாக்டவுனில் தனக்கென யூடியூப் சேனலை தொடங்கியவர், அதில் ஏராளமான பயனுள்ள கன்டென்ட்டுகளை பதிவேற்றி வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Asp3.png)
அந்த வரிசையில் சமீபத்தில் தன் கணவரோடு இணைந்து மக்களை என்டெர்டெயின் செய்யும் வகையில் காணொளி ஒன்றைப் பதிவேற்றினார். "எனக்கு ஏதாவது சவால் கொடு பண்ணலாம் என்று பிரபாவிடம் கேட்டால் அவர் சொல்லவே இல்லை. அதனால், நானே யோசித்து ஒரு சவாலை சொன்னேன். ஆனால், இதில் பாதிக்கப்படப்போவது என்னவோ நான்தான். ஆமாம், எனக்கு மேக்-அப் போடச் சொல்லி இருக்கிறேன். என்ன பண்ணப் போகிறார் என்பதைப் பார்க்கலாம்" என்றபடி இந்த காணொளி தொடங்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Asp2.png)
"மேக்-அப் சம்பந்தப்பட்ட பொருள்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், அதெல்லாம் எப்படி உபயோகிப்பது என்பது எனக்குத் தெரியாது. அதெல்லாம் எதுக்கு உபயோகிக்கணும் என்றுகூட தெரியாது. டிப்ஸ் கேட்டாலும் அனிதா சொல்லவில்லை. பாப்போம் என்ன நடக்கபோகுதுனு" என்றபடி பெரிய மேக்-அப் பையை திறந்தார் அனிதாவின் கணவர் பிரபா.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Asp1.png)
டோனர், மாய்ஸ்ச்சரைசர் என மேக்-அப் போடுவதில் இருக்கும் வழிமுறைகளை பிரபா சரியாக பின்பற்றியதைப் பார்த்த அனிதாவிற்கு ஷாக். "இதற்குமுன் வேறு யாருக்காவது மேக்-அப் போட்டுவிட்ட அனுபவம் உண்டா?" என்று அனிதா கேட்க, அதற்கு, "அனிதா யூடியூப் சேனலுக்கு இதுதான் முதல் முறை" என்று பிரபா பதிலளிக்க நகைச்சுவை மொமென்ட்டாக அமைந்தது.
கன்சீலர், பிளஷ், ஐ ப்ரோ, ஐ ஷேடோ, ஐ லைனர், லிப்ஸ்டிக், லிப் க்ளாஸ் என அத்தனையும் அனிதாவின் முகத்தில் தீட்டி, வண்ணமயமாகிவிட்டார் பிரபா. கணவர் போட்டுவிட்டதாலேயே மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்தார் அனிதா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.