/tamil-ie/media/media_files/uploads/2021/04/Ar1up.jpg)
Archana Ann Zara Youtube Channel
Archana Ann Zara Youtube Channel Wow Life : 'காமெடி டைம்' நிகழ்ச்சி தொடங்கி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி வரை படபடவென பொறித்துத்தள்ளும் அர்ச்சனா. அவருக்கு நேரெதிர் அவருடைய மகள் ஜாரா. இவர்களுக்கு இடையில் மாட்டித் தவிக்கும் அர்ச்சனாவின் சகோதரி ஆன். இவர்களுடைய காமெடி கலந்த அட்ராசிட்டிகளை பார்க்க விரும்பினால் நிச்சயம் 'வாவ் லைஃப்' யூடியூப் சேனலுக்கு விசிட் அடிக்கலாம்.
அம்மா, மகள், சகோதரி என இவர்களின் வெவ்வேறு வாழ்க்கைமுறையை தனித்தனியே இந்த சேனலில் காணலாம். ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சேனலில் இதுவரை சுமார் 180 வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகும் 'சேலஞ்' காணொளி முதல் சமையல் வீடியோக்கள் வரை அனைத்தும் லட்சம் வியூஸ்களை பெற்றிருக்கின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Ar2.png)
ஆன் ஒர்க் அவுட், வீட்டு விசேஷங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஜாராவின் கிராஃப்ட் என இவர்கள் தேர்ந்தெடுக்கும் டாப்பிக்குகள் அனைத்தும் எளிமையானவை என்றாலும் ரசிக்க வைக்கும்படியாகதான் இருக்கிறது. மூவரும் இணைந்து நடனமாடி பதிவு செய்த காணொளி 2 மில்லியன் வியூஸ்களுக்கு மேல் சென்றிருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Ar3.png)
அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே சில வீடியோக்களை பதிவு செய்து, அவர் வீட்டிற்குள் இருக்கும்போதும் இந்த சேனலில் இருந்து காணொளிகள் வெளியாகின. அந்த அளவிற்கு யோசித்து மிகவும் டெடிகேட்டேடாக யூடியூபில் கவனம் செலுத்துகின்றனர். நூறு விடியோக்களுக்கு மேல் பதிவேற்றிருந்தாலும், இவர்களின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்தான். என்றாலும், குடும்பமாக அமர்ந்து சிறிது நேரம் டைம் பாஸ் பண்ண நினைத்தால் நிச்சயம் அர்ச்சனாவின் 'வாவ் லைஃப்' சேனலை தேர்வு செய்யலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.