காமெடி டைம் தொடங்கி தற்போது வரை நகைச்சுவை உணர்வோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் திறமைகொண்ட தொகுப்பாளினி என்றால், அர்ச்சனாதான். முழுமையான நீண்ட நிகழ்ச்சியை சலிப்பில்லாமல் நகர்த்துவது கைகளில்தான் உள்ளது. அதனை மிகச் சிறப்பாக செய்பவர் அர்ச்சனா. தன்னுடைய தினசரி வாழ்வில் சருமத்தை எப்படியெல்லாம் பராமரிக்கிறார் என்பதை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டிருக்கிறார். நிச்சயம் இது பலருக்கு உதவும்.
Advertisment
"மனசளவுல சந்தோஷமா இருந்தாலே அது முகத்தில் வெளிப்படும். இருந்தாலும் ஸ்பெஷல் நிகழ்வுகளில் நம்மை இன்னும் கொஞ்சம் பளிச்சென வைத்துக்கொள்வது முக்கியம். அதிலும் எனக்கு மேக்-அப் போட்டதுபோன்றே தெரியாத 'நோ மேக்-அப், மேக்-அப் லுக்'தான் மிகவும் பிடிக்கும். அதை எப்படிச் செய்யலாம் என்பதை இனி பார்க்கலாம்.
Archana with Som
Advertisment
Advertisements
இதனை மேஜிக் 7 என்று நான் சொல்லுவேன். அந்த வரிசையில் முதலில் நான் பயன்படுத்தப்போவது 'பேஸ் ஃபவுண்டேஷன் லிக்விட்'. ஆங்காங்கே முகத்தில் இந்த ஃபவுண்டேஷன் லிக்விட்டை அப்லை செய்து, சுத்தமான ஸ்பாஞ் வைத்து முகம் முழுக்க சீராக மசாஜ் செய்யவேண்டும். நிறையப் பேர் முகத்தில் மட்டும் சரும பாதுகாப்பு மற்றும் மேக்-அப் பொருள்களை உபயோகிப்பார்கள். ஆனால், அது தவறு. நிச்சயம் கழுத்து பகுதியிலும் உபயோகிக்க வேண்டும்.
Bigg Boss Archana
அடுத்தது காம்பேக்ட். சிறிதளவு மட்டுமே இந்த காம்பேக்ட் பவுடரை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்லை செய்யவேண்டும். இதற்கு அடுத்தது, பிளஷ். சிறிதளவு பிளஷ் எடுத்து, கன்னம் விளிம்புகளிலும், பிறகு மீன் போன்ற முக வடிவம் வைத்து கன்னம் எலும்புகளிலும் ஹயிலைட்டாக்குங்கள். இது உங்கள் சிரிப்பை மேலும் மெருகேற்ற உதவும்.
அடுத்தது கண்களை அழகாக்குவது மிகவும் முக்கியம். கண்களுக்கு ஐ ஷேடோ, காஜல், ஐ லைனர், மஸ்காரா போதும். அதிகப்படியான லாஷஸ் வைக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. இறுதியாக லிப்ஸ்டிக். எனக்கு நியூட் ஷேடுகள்தான் மிகவும் பிடிக்கும். ஃபைனல் ட்ச்சாக பொட்டு. அவ்வளவுதான் எளிமையான நோ மேக்-அப் லுக் கிடைத்துவிடும். ஐந்தே நிமிடங்களில் ரெடியாகிவிடுவீர்கள். எவ்வளவுதான் மேக்-அப் போட்டாலும், புன்னகையை எப்போதும் முகத்தில் சுமந்துசெல்வது முக்கியம்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil